மேடவாக்கத்தில் அரிய வகை அணில், வெளிநாட்டுப் பறவைகள், உடும்புகள் பறிமுதல்: வீட்டில் வைத்து வளர்த்துவந்த இளைஞர் கைது

மேடவாக்கத்தில் அரிய வகை அணில், வெளிநாட்டுப் பறவைகள், உடும்புகள் பறிமுதல்: வீட்டில் வைத்து வளர்த்துவந்த இளைஞர் கைது
Updated on: 
1 min read

மேடவாக்கம்: சென்னை வனம் மற்​றும் வன உயி​ரினக் குற்​றங்​கள் கட்​டுப்​பாட்​டுப் பிரி​வினருக்​குக் கிடைத்த ரகசிய தகவலின்​பேரில், தாம்​பரம் வனச்​சரக அலு​வலர் தலை​மையி​லான வனத்​துறை​யினர் கடந்த 25-ம் தேதி மேட​வாக்​கம் பொன்​னியம்​மன் கோயில் தெரு​வில் சிவக்​குமார் (26) என்​பவரது வீட்​டில் சோதனை நடத்தினர்.

அப்​போது, வன உயி​ரினப் பாது​காப்​புச் சட்​டத்​தின் அட்​ட​வணை I-ல் இடம்​பெற்​றுள்ள பாது​காக்​கப்​பட்ட உயி​ரினமான ஓர் அரிய வகை கிரி​சில்ட் அணில் (Grizzled Giant Squirrel) இருப்​பது கண்​டறியப்​பட்​டது.

சிறையில் அடைப்பு

மேலும் உரிய பதிவுச் சான்​றிதழ் இன்றி 1 சன்​கானூர் பறவை, 6 ஆப்​பி​ரிக்க லவ் பேர்ட்ஸ் பறவை​கள், 2 பச்சை நிறம், ஒரு சிவப்பு நிறம் என மொத்​தம் 3 இளம் வயது உடும்​பு​கள் வளர்க்​கப்​பட்டு வந்​ததும் தெரிய​வந்​தது.

இதையடுத்து அந்த உயி​ரினங்​களைக் கூண்​டுகள், பிளாஸ்​டிக் பெட்​டிகளு​டன் வனத்​துறை​யினர் பறி​முதல் செய்​தனர். தொடர்ந்து சிவகுமாரை தாம்​பரம் வனச்​சரக அலு​வல​கத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தினர்.

இது தொடர்​பாக வன உயி​ரினப் பாது​காப்​புச் சட்​டம் 2022-ன் கீழ் வழக்​குப் பதிவு செய்த வனத்துறை​யினர், சிவக்​குமாரைக் கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். பின்​னர் அவர் நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

மேடவாக்கத்தில் அரிய வகை அணில், வெளிநாட்டுப் பறவைகள், உடும்புகள் பறிமுதல்: வீட்டில் வைத்து வளர்த்துவந்த இளைஞர் கைது
தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளில் மாயமான 15,959 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்

X