அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தனியார் தொலைக்காட்சி விஷுவல் எடிட்டர் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தனியார் தொலைக்காட்சி விஷுவல் எடிட்டர் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: மதுர​வாயல், மேற்கு மாட வீதி​யைச் சேர்ந்​தவர் முத்து ஜெக​நாதன் (28). தனி​யார் தொலைக்​காட்சி நிறு​வனம் ஒன்​றில் விஷுவல் எடிட்​ட​ராக பணி​யாற்றி வந்​தார். இவர் நேற்று காலை வழக்​கம்​போல் தனது வீட்​டிலிருந்து பைக்​கில் சென்​னை​யில் உள்ள அலு​வல​கத்​துக்கு புறப்​பட்​டார்.

பூந்​தமல்லி நெடுஞ்​சாலை​யில் உள்ள ரேஷன் கடை பேருந்து நிறுத்​தம் அருகே வந்​த​போது, அந்த வழி​யாக கோயம்​பேடு நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்​றின் பக்​க​வாட்டு பகுதி எதிர்​பா​ராத வித​மாக பைக் மீது மோதி​யது.

இதில் நிலை தடு​மாறிய முத்து கீழே விழுந்து பேருந்து சக்​கரத்​தில் சிக்கி உயி​ரிழந்​தார்.

தகவல் அறிந்து மதுர​வாயல் போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து உடலைக் கைப்​பற்றி பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும் விபத்தை ஏற்​படுத்​திய பேருந்து ஓட்​டுநரைக் கைது செய்து வி​சா​ரிக்​கின்​றனர்​.

அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தனியார் தொலைக்காட்சி விஷுவல் எடிட்டர் உயிரிழப்பு
பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் கைதான பிஹார் இளைஞரிடம் போலீஸார் தீவிர விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in