ஆலங்குளம் அருகே தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸார்

ஐயப்பன்

ஐயப்பன்

Updated on
1 min read

தென்காசி: ஆலங்​குளம் அருகே திருமண நிகழ்ச்​சி​யில் நடந்த தாக்​குதல் சம்​பவத்​தில் தொடர்​புடைய இளைஞரை போலீ​ஸா​ர் துப்​பாக்​கி​யால் சுட்டுப் பிடித்தனர்.

தென்​காசி மாவட்​டம், ஆலங்​குளம் அருகே நெட்​டூரில் கடந்த 29-ம் தேதி நடந்த திருமண நிகழ்ச்​சி​யில் முகமூடி அணிந்த கும்​பல் நுழைந்​து, அங்கு இருந்​தவர்​களை அரி​வாள், கத்தி போன்ற ஆயுதங்​களால் தாக்​கி​விட்டு தப்​பியது. இதில் 6 பேர் காயமடைந்​தனர். இதையடுத்து தனிப்படை போலீஸார், சுத்​தமல்லி அருகே இசக்​கி​முத்து, 3 சிறு​வர் களையும் ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி, நெட்​டூரைச் சேர்ந்த மாரியப்​பன், பிர​முத்துநவீன், சஞ்​சய் என மொத்​தம் 8 பேரை கைது செய்​தனர்.

இந்​நிலையில், முக்கிய நபரான நெட்டூர் ஐயப்​பன் முக்கூடல் அருகே பதுங்கி இருந்தபோது, போலீ​ஸார் சுற்​றி வளைத்​தனர். அப்போது அவர் அரிவாளால் போலீ​ஸாரை வெட்​டியுள்​ளார். இதில் ஏட்டு முத்​துக்​குமார், காவலர் பால சுப்​பிரமணி​யனுக்குகையில் காயம் ஏற்​பட்டது. போலீஸார் தற்​காப்​புக்​காக துப்பாக்​கி​யால் சுட்​ட​தில் ஐயப்​பனின் வலது காலில் குண்டு பாய்ந்​தது. அவர் நெல்லை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார்.மேலும் சிலரை தனிப்​படை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>ஐயப்பன்</p></div>
திருச்செங்கோடு கோயில் தேரோட்டத்தில் சோகம்: தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in