தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

காவல் ஆய்வாளர் முகமது புஹாரி

காவல் ஆய்வாளர் முகமது புஹாரி

Updated on
1 min read

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.40 லட் சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிட மிருந்து ரூ.40 லட்சம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் யானைக்கவுனி போலீஸார் கடந்த ஆக.3-ம் தேதி கைது செய்தனர்.

இவர்கள் இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கு தொடர் பான டிஜிட்டல் ஆதாரங்கள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். எனவே ஜாமீன் வழங்க வேண்டும், எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி பி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் காவல் ஆய்வாளர் என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது, என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிப தி, இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

<div class="paragraphs"><p>காவல் ஆய்வாளர் முகமது புஹாரி</p></div>
வளசரவாக்கத்தில் குடிநீர் தரமாக உள்ளது: சென்னை குடிநீர் வாரியம் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in