மதுரை அருகே ஓட்டுநரின் தூக்கத்தால் ஆம்னி பேருந்து, அரசு பேருந்து மீது மோதி 6 பேர் உயிரிழப்பு

தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்
மதுரை அருகே ஓட்டுநரின் தூக்கத்தால் ஆம்னி பேருந்து, அரசு பேருந்து மீது மோதி 6 பேர் உயிரிழப்பு
Updated on
2 min read

மதுரை: மதுரை மாவட்​டம் கொட்​டாம்​பட்டி அருகே அதி​காலை​யில் ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த, ஆம்னி பேருந்து சாலை தடுப்பை உடைத்​துச் சென்​ற​ போது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி​யது. இதில் உதவித் தலைமை ஆசிரியர் உள்பட 6 பேர் உயி​ரிழந்​தனர், 40-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்​னையில் இருந்து நேற்று முன்​தினம் இரவு கன்​னி​யாகுமரி மாவட்​டம் மார்த்​தாண்​டம் நோக்கி பயணி​களு​டன் ஆம்னி பேருந்து புறப்​பட்​டது. பேருந்தை ஓட்​டுநர் சுரேஷ் ஓட்​டி​னார். மதுரை மாவட்​டம் கொட்​டாம்​பட்டி அருகே வஞ்​சிநகரம் என்ற இடத்​தில் நான்கு வழிச்​சாலை​யில் அதி​காலை சுமார் 3.20 மணிக்கு சென்​ற​போது ஓட்​டுநர் தூக்க கலக்​கத்​தில் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதனால், கட்​டுப்​பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலை​யின் எதிர் திசைக்கு பாய்ந்தது.

அப்​போது மதுரை​யில் இருந்து திருச்​சிக்​குப் பயணி​களு​டன் சென்ற அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி​யது. மேலும், அதே வேகத்​தில் சாலை​யோரம் இருந்த பயணி​கள் நிழற்​குடை​யிலும் மோதி​யது. அதி​காலை நேரம் என்​ப​தால் தூக்​கத்​தில் இருந்த பயணி​கள் விபத்​தால் அலறினர். தகவல் அறிந்த கொட்​டாம்​பட்டி போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர் விரைந்து இரு பேருந்​துகளி​லும் சிக்​கிய​வர்​களை​யும், நிழற்​குடை இடி​பாட்​டில் சிக்​கிய வஞ்​சிநகரம் பெரு​மாள் என்​பவரை​யும் மீட்​டனர்.

இந்த விபத்​தில் நெல்லை பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி சிறியபுஷ்பம் (56), திசையன்​விளையைச் சேர்ந்த ஜான்​சன் மகன் ஆபிர​காம் ( 40 ) திருச்சி எடமலைப்​பட்​டியைச் சேர்ந்த துவரங்​குறிச்சி அரசுப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ஆனந்​த​ராஜ் (46), திருச்சி காவல்​துறை குடி​யிருப்பு கணேசன் மகன் சூர்யா (29), திரு​வாரூர் முகமது யாசின் (60), ஆகிய 5 பேரும் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். சிறிய புஷ்பம், ஆபி​ர​காம் ஆகியோர் ஆம்னி பேருந்​தி​லும், மற்ற 3 பேரும் அரசுப் பேருந்​தி​லும் பயணித்​தவர்​கள் ஆவர்.

அரசுப் பேருந்து ஓட்​டுநர் ஜோதி உள்பட 2 பேருந்​தி​லும் பயணித்த 41 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இவர்​கள் மேலூர், மதுரை அரசு மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இவர்​களில் பெரு​மாள் (70) சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். இதையடுத்து உயி​ரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்​தது. விபத்து நடந்த இடத்தை மதுரை சரக டிஐஜி அபினவ்​குமார், எஸ்பி தேவ​நாதன் பார்​வை​யிட்​டனர். கொட்​டாம்​பட்டி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதனிடையே உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.3 லட்சமும் பலத்த காயமடைந்த 7 பேருக்கு தலா ரூ.1 லட்சமும் இலேசான காயமடைந்த 15 பேருக்கு தலா ரூ.50,000-மும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

வெகு தூரம் ஒரே ஓட்​டுநர்: ஆம்னி பேருந்து ஓட்​டுநர் சுரேசை திருச்​சி​யில் மற்​றொரு ஓட்​டுநர் மாற்​றவேண்டி இருந்​தது. ஆனால், அவரை மாற்​றாமல் இருந்​த​தால் சென்​னை​யில் இருந்து ஒரு​வரே தொடர்ந்து ஓட்​டிய​தாக தெரிகிறது. இதனால் விபத்து நிகழ்ந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

மதுரை அருகே ஓட்டுநரின் தூக்கத்தால் ஆம்னி பேருந்து, அரசு பேருந்து மீது மோதி 6 பேர் உயிரிழப்பு
“ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும்; கப்பல்களுக்கு 20% கட்டணம்” - ட்ரம்ப் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in