

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பிரபல திருடனை ஆர்.பி.எஃப் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் குற்ற புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் பி.நவீன் குமார் தலைமையில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் (50) என்பதும், பிரபல கொள்ளையன் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஜூலை 28-ம் தேதி திருப்பத்தூரில் உள்ள ஒரு செல்போன் கடையின் பூட்டை உடைத்து, ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கைபேசியை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, விஜயகுமாரை கைது செய்து திருப்பத்தூர் நகர போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், அவர் மீது கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் போத்தனூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.