

கோப்புப் படம்
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினர், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், சிறப்பு அதிரடி படையினர் நேற்று முன்தினம் மாலை இலங்கை தெற்கு கடல் பகுதியில் வந்துகொண் டிருந்த மீன்பிடி விசைப்படகை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.
அப்படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 161 கிலோ போதைப்பொருளை கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.161 கோடியாகும். இதுதொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை திக்கோவிட்ட துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.