மதுரை மேலூரில் 7 வயது சிறுவன் கொலை? - பாழடைந்த வீட்டில் உடல் மீட்பு

 சிறுவன் முத்துவேலன்

சிறுவன் முத்துவேலன்

Updated on: 
1 min read

மதுரை: மதுரை மேலூர் அருகே வெளியே விளை​யாடப் போன 7 வயது சிறு​வனின் உடல் பாழடைந்த வீட்​டுக்​குள் இருந்து நேற்று மீட்​கப்​பட்​டது. அச்​சிறு​வன் கொலை செய்​யப்​பட்​டானா என்ற கோணத்​தில் போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரிக்​கின்​றனர்.

மதுரை மேலூர் அருகே தணி​யாமங்​கலத்​தைச் சேர்ந்​தவர் பெரியகருப்​பன். வெளி​நாட்​டில் வேலை பார்க்​கிறார். இவரது மனைவி சத்யா. இவர்​களுக்கு 2 பெண் குழந்​தைகள் மற்​றும் 7 வயதில் முத்​து​வேலன் என்ற மகன் இருந்​தார். 3-ம் வகுப்பு படித்து வந்​தார்.

விடு​முறை நாளான நேற்று முன்​தினம் மாலை முத்​து​வேலன் மற்​றும் சிறு​வர்​கள் வீட்​டுக்கு அரு​கில் விளை​யாடிக் கொண்​டிருந்​தனர். நீண்ட நேர​மாகி​யும் முத்​து​வேலன் வீடு திரும்​பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்​றும் உறவினர்​கள் பல இடங்​களில் தேடியும் அவரைக் கண்​டு​பி​டிக்க முடிய​வில்லை. இது​குறித்து கீழவளவு போலீ​ஸில் சத்யா புகார் கொடுத்​தார். போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து தீவிர​மாக தேடினர்.

இதற்​கிடை​யில் சிறு​வனின் வீட்​டுக்கு அரு​கில் 3 வீடுகளை கடந்து பாழடைந்த ஓட்டு வீட்​டுக்​குள் அவன் இறந்து கிடப்​பது நேற்று காலை தெரிய வந்​தது. தகவலறிந்த கீழவளவு போலீ​ஸார் சம்​பவ இடத்​துக்கு சென்று சிறு​வனின் உடலைக் கைப்​பற்றி விசா​ரித்​தனர். மோப்ப நாய் சோதனை நடை​பெற்​றது. அச்​சிறு​வன் கொலை செய்​யப்​பட்​டிருக்​கலாம் எனத் தெரி​கிறது.

போலீ​ஸார் கூறுகை​யில், ‘ஆடையுடன் கிடந்த சிறு​வனின் உடலில் பெரியளவில் வெளிப்​படை​யான காயங்​கள் இல்லை. ஒரு​வேளை பாம்பு உள்​ளிட்ட விஷ ஜந்​துக்​கள் கடித்​திருக்​கலாம் என்ற சந்​தேகமும் உள்​ளது. முத்​து​வேலனுடன் விளை​யாடச் சென்ற சிறு​வர்​களிடமும் விசா​ரணை நடந்து வரு​கிறது’ என்​றனர்.

<div class="paragraphs"><p> சிறுவன் முத்துவேலன்</p></div>
“அரசின் தோல்விகளை மறைக்கவே அன்பில் மகேஸ் கைது” - உதயநிதி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in