நீலகிரி: பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

நீலகிரி: பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
Updated on
1 min read

ஊட்டி: நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, கடந்த ஏப். 16-ம் தேதி உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது.

இதுகுறித்த புகாரை விசா​ரித்த குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து, சிறுமி​யின் தாத்​தா​வான 75 வயது முதி​ய​வரைக் கைது செய்​தனர்.

இந்த வழக்கு ஊட்டி மகளிர் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. வழக்கை விசா​ரித்த நீதிபதி எம்​.செந்​தில்​கு​மார், குற்​றம் சுமத்​தப்​பட்ட முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார்.

மேலும், பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்​சம் நிவாரண நிதி வழங்​கு​மாறு ஆட்​சி​யருக்கு உத்​தர​விட்​டார். இந்த வழக்​கில் அரசுத் தரப்​பில் வழக்​கறிஞர் பி.செந்​தில்​கு​மார் ஆஜரா​னார். தொடர்ந்​து, சிறுமி​யின் தாத்தா கோவை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்​.

நீலகிரி: பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
தமிழ்ப் பல்கலை.யில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக வழக்கு: பேராசிரியர்கள் 32 பேருக்கு நோட்டீஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in