விமான நிலையத்தில் ரூ.2.30 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில நபர் கைது

விமான நிலையத்தில் ரூ.2.30 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில நபர் கைது
Updated on: 
1 min read

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.2.30 கோடி மதிப்​புள்ள தங்கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

ஐக்​கிய அரபு அமீரக தலைநகர் அபு​தாபி​யில் இருந்து இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் சென்​னைக்கு வந்​தது.

அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் மத்​திய வரு​வாய் புல​னாய்​வுத்​துறை, சுங்​கத்​துறை அதி​காரி​கள் தீவிர​மாக சோதனை செய்து அனுப்பி கொண்​டிருந்​தனர்.

அப்​போது வந்த வடமாநிலத்தை சேர்ந்த ராஜீப் இப்​ராம் ஷா (42) என்ற பயணி மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. அவரை நிறுத்தி அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். அப்​போது, அவர் அதி​காரி​களிடம் கடும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார்.

இதையடுத்​து, அவர் வைத்​திருந்த பார்​சலை அதி​காரி​கள் பிரித்து சோதனை செய்த போது, ரூ.2.30 கோடி மதிப்​புள்ள 1.60 கிலோ தங்​கப்​பசையை மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

தங்​கத்தை பறி​முதல் செய்த அதி​காரி​கள் அவரை கைது செய்து விசா​ரணை நடத்​தி​ய​தில், அவர் ஏற்​கெனவே துபாய், அபு​தாபி, சார்​ஜா, குவைத், சிங்​கப்​பூர், மலேசி​யா, இலங்கை உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களுக்கு சென்று வந்​திருப்​பது தெரிய​வந்​தது. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்தில் ரூ.2.30 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில நபர் கைது
அன்பில் மகேஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கை எதிர்த்த தவெக எம்எல்ஏ மனு தள்ளுபடி

X