சென்னை | பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

சென்னை | பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை ஜாபர்​கான்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒரு​வர், தனது அக்கா​வுடன் வாடகை வீட்​டில் வசித்து வரு​கிறார்.

இவர் அரு​கில் உள்ள ஒரு தனி​யார் நிறு​வனத்​தில் ஊழிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 25-ம் தேதி இரவு, அந்​தப் பெண்​ணின் அக்கா தனது உறவினரைப் பார்ப்​ப​தற்​காக வெளியே சென்​றிருந்​தார். இதனால் இளம்​பெண் மட்​டும் வீட்​டில் தனி​யாக இருந்​துள்​ளார்.

அப்​பெண் உறங்​கிக் கொண்​டிருந்​த​போது, அந்த வீட்​டின் உரிமை​யாளர் மகனான அனந்த கிருஷ்ணன் (41) வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்​துள்​ளார். அவர் தூங்​கிக் கொண்​டிருந்த பெண்​ணிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாகத் தெரி​கிறது.

இதனால் அதிர்ச்​சி​யடைந்து விழித்த அந்​தப் பெண் கூச்​சலிட முயன்​ற​போது, அனந்த கிருஷ்ணன் கொலை மிரட்​டல் விடுத்து அங்​கிருந்து தப்​பிச் சென்​றுள்​ளார்.

வெளியே சென்​றிருந்த அக்கா வீடு திரும்​பியதும், நடந்த கொடுமை​யைக் கூறி அந்த இளம்​பெண் கதறி அழுதுள்​ளார். இதையடுத்​து, பாதிக்​கப்​பட்ட பெண் எம்​.ஜி.ஆர் நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

புகாரின் பேரில் வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார், அனந்த கிருஷ்ணனைப் பிடித்து விசா​ரணை நடத்​தினர். அவர் ஒரு தனி​யார் நிறு​வனத்​தில் மேலா​ள​ராகப் பணிபுரிந்து வரு​வது தெரிய​வந்​தது.

விசா​ரணை​யைத் தொடர்ந்​து, அனந்த கிருஷ்ணனை போலீ​ஸார் கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர்.

சென்னை | பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
வேளச்சேரி - பரங்கிமலை மின்சார ரயில்​ சேவைக்கு அமோக வரவேற்பு: ​தினமும் 28,000+ பேர் பயணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in