ஐடி பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

ஐடி பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது
Updated on: 
1 min read

சென்னை: சென்னை போரூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒரு​வர், மணப்​பாக்​கத்​தில் உள்ள தகவல் தொழில்​நுட்ப நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார்.

அதே நிறு​வனத்​தில் பணிபுரி​யும் சென்னை மதுர​வாயல், ஆலப்​பாக்​கம், ஆற்​காடு ரோடு பகு​தி​யைச் சேர்ந்த ராம் (29) என்​பவர், அந்​தப் பெண் மற்​றும் சக பெண் ஊழியர்​களின் புகைப்​படங்​கள், வீடியோக்​களை இன்​ஸ்​டாகி​ராமில் இருந்து பதி​விறக்​கம் செய்​து, அவற்றை ஆபாச​மாக சித்​தரித்து தனது மடிக்​கணினி​யில் சேமித்து வைத்​திருந்​த​தாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்​கப்​பட்ட பெண் அளித்த புகாரின்​பேரில், நந்​தம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். ராமின் மடிக்​கணி​களை சோதனை செய்ததில் அவற்​றில் பல பெண்​களின் புகைப்​படங்​கள் ஆபாச​மாக சித்​தரிக்​கப்​பட்டு சேமித்து வைக்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது.

அவர் இதை ஒரு பழக்​க​மாக, படங்​களை சேமித்து பார்த்து ரசித்து வந்​துள்​ளார். இதையடுத்​து, ராமை போலீ​ஸார் கைது செய்​தனர். 2 மடிக்​கணினிகள், ஒரு ஐபோனை பறிமுதல் செய்​தனர்.

ஐடி பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது
சென்னையில் அடுத்தடுத்து வழிப்பறி: 4 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in