நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர் தற்கொலை முயற்சி: கட்டாய வசூல் நடவடிக்கை தடுப்பு சட்டத்தில் மேலாளர் கைது

நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர் தற்கொலை முயற்சி: கட்டாய வசூல் நடவடிக்கை தடுப்பு சட்டத்தில் மேலாளர் கைது
Updated on
1 min read

விழுப்​புரம் / சென்னை: தனி​யார் நிதி நிறு​வனத்​தில் கடன் வாங்​கிய​வர் தற்​கொலை செய்ய முயன்ற வழக்​கில், கட்​டாய வசூல் நடவடிக்கை தடுப்​புச் சட்​டத்​தில் நிதி நிறுவன மேலா​ளர் கைது செய்​யப்​பட்​டார்.

விழுப்​புரம் மாவட்​டம் திரு​வெண்​ணெய்​நல்​லூர் அடுத்த பென்​னை​வளம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் அப்​பாஸ் (43). இவர் 2019-ல் தனி​யார் நிதி நிறு​வனத்​தில் ரூ.9.84 லட்​சம் கடன் பெற்​று, பொக்​லைன் இயந்​திரம் வாங்​கி​யுள்​ளார்.

வட்​டி​யுடன் சேர்த்து 2025-ம் ஆண்டு வரை ரூ.15 லட்​சத்து 97,660 செலுத்த வேண்​டும். இதில் ரூ.5 லட்​சத்து 20,680 மட்​டுமே அப்​பாஸ் செலுத்தி உள்ளார். மேலும், கடந்த இரண்​டரை ஆண்​டு​களாக தவணைத் தொகை செலுத்​த​வில்​லை. ரூ.10.80 லட்​சம் பாக்கி இருந்​துள்​ளது.

இந்​நிலை​யில், பென்​னை​வளம் கிராமத்​தில் தனது செங்​கல் சூளை​யில் இருந்த அப்​பாஸிடம் கடன் தொகையை வசூலிப்​ப​தற்​காக, தனி​யார் நிதி நிறுவன மேலா​ளர்​கள் மூர்த்​தி, தீபஜோ​தி, ஊழியர் தியாகலீசன் உட்பட 4 பேர் கடந்த 13-ம் தேதி சென்​றுள்​ளனர்.

கடன் தொகையை வசூலிப்​பது தொடர்​பாக இரு தரப்​பினரிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, கைகலப்​பில் முடிந்​தது. இதனால் மனமுடைந்த அப்​பாஸ், தன் மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​துக் கொண்​டார்.

உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் விழுப்​புரம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். பின்​னர், உயர் சிகிச்​சைக்​காக சென்னை கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டு, சிகிச்சை பெற்று வரு​கிறார்.

இதுகுறித்து அப்​பாஸ் கொடுத்த புகாரின் பேரில் பார​திய நியாய சன்​ஹிதா (பிஎன்​எஸ்) மற்​றும் தமிழ்​நாடு பணக் கடன் வழங்​கும் நிறு​வனங்​களின் கட்​டாய வசூல் நடவடிக்​கை தடுப்பு சட்​டத்தின் கீழ் திரு​வெண்​ணெய் நல்​லூர் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​து, நிதி நிறுவன மேலா​ளர் மூர்த்​தியை கைது செய்​தனர்.

கைது நடவடிக்கை... சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி (பொறுப்​பு) வெங்​கட​ராமன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு கடன் வழங்கும் நிறு​வனங்​கள் (கட்டாய வசூல் நடவடிக்​கைகள் தடுப்​பு) சட்​டம் 2025 ஜூன் 9-ல் நடைமுறைக்கு வந்​தது.

ஏழை மற்​றும் பாதிக்​கப்​படக்​கூடிய மக்​களை, குறிப்​பாக விவ​சா​யிகள், பெண்​கள் மற்​றும் மகளிர் சுய உதவிக்குழு​வினரை, தனி​யார் கடன் வழங்​கும் நிறு​வனங்​களின் துன்​புறுத்​தல் அல்​லது கட்​டாய மீட்பு முறை​களி​லிருந்து பாது​காப்​ப​தற்​காக இந்த சட்​டம் தமிழக அரசால் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இந்த சட்​டத்​தின் கீழ் முதல் வழக்கை கீழ் திரு​வெண்​ணெய் நல்​லூர் போலீ​ஸார் பதிவு செய்​து, கைது நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளனர். இவ்​வாறு டிஜிபி தெரிவித்​துள்​ளார்​.

நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர் தற்கொலை முயற்சி: கட்டாய வசூல் நடவடிக்கை தடுப்பு சட்டத்தில் மேலாளர் கைது
89 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைக்கு ராஜபக்ச மகன் நமல் வரவேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in