சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.

உணவுப் பொருள் பாக்கெட் அப்போது வந்த கேரளாவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு வந்த அவரது உடைமைகளை சோதனை அதிகாரிகள் சோதனை செய்த போது, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகள் இருந்தன.

அதனை பிரித்து பார்த்த போது ரூ.6 கோடி மதிப்புள்ள 6 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் கடத்த கும்பலுக்கு கடத்தல் குருவியாக செயல்பட்டிருப்பது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞர் கைது
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் விஜய் ஆட்சியை பாராட்டியதற்கு எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in