சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் விஜய் ஆட்சியை பாராட்டியதற்கு எதிர்ப்பு

காங்கிரஸ் கவுன்சிலரை பேச விடாமல் திமுகவினர் அமளி
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் விஜய் ஆட்சியை பாராட்டியதற்கு எதிர்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் முதல்​வர் விஜய் தலை​மை​யில் அமைந்த ஆட்​சியை மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​தில் காங்​கிரஸ் கவுன்​சிலர் பாராட்டியதற்கு, திமுக கவுன்​சிலர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​து, அவரை பேச விடா​மல் கூச்​சலிட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

சென்னை மாநக​ராட்சி மன்ற கூட்​டம் நேற்று கூடியது. மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன், துணை மேயர் மு.மகேஷ் கு​மார் ஆகியோர் முன்​னிலை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் அதி​முக கவுன்​சிலர் கே.பி.கே.சதீஷ்கு​மார் பேசும்​போது, ``நான் வார்டு பிரச்​சினையை மட்​டும்​தான் பேச வந்​திருக்​கிறேன்.

மற்​றவர்​களைப் போல கட்​சித் தலை​வரின் புகழ் பாட வரவில்​லை''என்​றார். இதனால் கோபமடைந்த திமுக கவுன்​சிலர்​கள், அதி​முக கவுன்​சிலர் சதீஷ்கு​மாரை முற்​றுகை​யிட்டு கூச்​சலிட்​டனர். காகிதங்​களை எடுத்து சதீஷ்கு​மார் மீது வீசினர். திமுக கவுன்​சிலர்​கள் அனை​வரும் எழுந்​து, சதீஷ் கு​மாருக்கு எதி​ராக கூச்​சலிட்​டனர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு நில​வியது. அதனைத் தொடர்ந்​து, ``அனைத்து மண்​டலக்​குழு அலு​வல​கங்​களி​லும் முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் படத்தை அகற்​று​வதைத் தடுக்க வேண்​டும். மண்​டலக்​குழு கூட்​டங்​களில் தவெக​வினர் பங்​கேற்​ப​தைத் தடுக்க வேண்​டும்.

பள்​ளி​களில் ஆளுங்​கட்​சி​யினர் முதல்​வர் விஜய் படத்தை மாட்​டி, கட்​சிக் கொள்கை பாடல்​களை பாடு​வதைத் தடுக்க வேண்​டும். திமுக ஆட்​சி​யில் செயல்​படுத்​தப்​படும் திட்​டங்​களில் முதல்​வர் விஜய் படம் வைப்​ப​தைத் தடுக்கவேண்​டும்'' என்று திமுக கவுன்​சிலர்​கள் வலி​யுறுத்​தினர்.

பின்​னர் மேயர் பிரியா பேசும்​போது, ``பள்​ளி​கள், மண்​டலக் குழு அலு​வல​கங்​களில் முன்​னாள் முதல்​வர் படங்​களை வைக்க அனு​மதி உள்​ளது. மாநக​ராட்சி பள்​ளி​களில் கட்சி நிகழ்ச்​சிகளை நடத்​தி​னால், பள்ளி தலை​மை​யாசிரியர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

வரும் காலங்​களில் புதிய அரசு சார்​பில் செயல்​படுத்​தும் திட்​டங்​களில் வேண்​டு​மா​னால் முதல்​வர் படத்தை வைத்​துக்​கொள்​ளலாம்'' என்​றார். காங்​கிரஸ் கவுன்​சிலர் எம்​.எஸ்​.​திர​வி​யம், ``முதல்​வர் விஜய் தலை​மை​யில், தமிழகத்​தில் நல்​லாட்சி அமைந்​ததற்கு பாராட்​டு​கள்'' என்று பேச்​சைத் தொடங்​கி​னார்.

இதற்கு திமுக கவுன்​சிலர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​து, காங்​கிரஸ் கவுன்​சிலர்​களை சூழ்ந்​து​கொண்​டு, காங்​கிரஸ் துரோகி எனக் கூச்​சலிட்​டு, காங்​கிரஸ் கவுன்​சிலரை தொடர்ந்து பேச​வி​டா​மல் இடையூறு செய்​தனர். இதனால் மாமன்​றத்​தில் திடீர் பரபரப்பு ஏற்​பட்​டது. இதைக் கண்​டித்​து, காங்​கிரஸ் கவுன்​சிலர்​கள் வெளிநடப்பு செய்​தனர்.

திமுக கவுன்​சிலர் பரிதி இளம் சுருதி பேசும்​போது, குட்​டிக்​கதை சொல்​கிறேன் எனக்​கூறி, பெரம்​பூர் தொகு​தி​யில் ஒரு பாட்​டி, தான் வாக்​களித்த எம்​எல்​ஏவை தேடிய​தாக​வும், கையில் மின் வெட்டு தொடர்​பான புகார் மனு வைத்​திருந்​த​தாக​வும் தெரி​வித்​த​போது, மாமன்​றமே சிரிப்​பலை​யில் அதிர்ந்​தது.

பின்​னர், மாநக​ராட்சி பள்​ளி​களில் தற்​காலிக இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் நியமனம்​ செய்​வது உள்​ளிட்​ட 38 தீர்​மானங்​கள்​ மாமன்​றக்​ கூட்​டத்​தில்​ நிறைவேற்​றப்​பட்​டன.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் விஜய் ஆட்சியை பாராட்டியதற்கு எதிர்ப்பு
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தை இந்து கலாச்சார உரிமையாக பார்க்க வேண்டும்: தமிழிசை வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in