யூடியூப் சேனல் ஊழியருக்கு கொலை மிரட்டல்: இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் கைது

யூடியூப் சேனல் ஊழியருக்கு கொலை மிரட்டல்: இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் கைது
Updated on
1 min read

சென்னை: சினிமா காட்​சிகளை அப்​படியே நடித்து ரீல்ஸ் வெளி​யிட்டு பிரபல​மானவர் திவாகர். இந்நிலை​யில், திவாகர் சில தினங்​களுக்கு முன், கார்த்​திக் என்ற நபர் போலீ​ஸாருக்கு பணம் கொடுத்து தன் மீது வழக்​குப் பதிவு செய்ய வைத்​ததாக வீடியோவெளி​யிட்டு இருந்த​தாக கூறப்​படு​கிறது.

இன்​ஸ்டாகி​ராமில் பதிவேற்​றம் செய்​யப்பட்ட அந்த வீடியோவை நீக்​கக்கோரி யூடியூப் சேனல் ஊழியர் கார்த்​திக், திவாகரிடம் கேட்​டுள்​ளார். அப் போது, திவாகர் வீடியோவை நீக்க ரூ.1 லட்​சம் பணம் தர வேண்​டும் என்று கேட்டு கொலை மிரட்​டல் விடுத்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து, கார்த்​திக் புகார் அளித்த நிலை​யில் பணம் கேட்டு மிரட்​டு​தல், கொலை மிரட்​டல் விடுத்​தல் உள்​ளிட்ட பிரிவு​களில் கீழ்ப்​பாக்​கம் போலீ​ஸார் திவாகர் மீது வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கின் அடிப்​படை​யில், மதுரை​யில் இருந்த திவாகரை சென்னை கீழ்ப்​பாக்​கம் போலீ​ஸார் கைது செய்​தனர். இந்​நிலை​யில், எழும்​பூர்

குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் திவாகரை போலீ​ஸார் நேற்று ஆஜர்​படுத்​தினர். இதையடுத்​து, அவரை நீதிப​தி​கள் ஜாமீனில் விடு​வித்​தனர்​.

யூடியூப் சேனல் ஊழியருக்கு கொலை மிரட்டல்: இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் கைது
பாமகவின் 38-ம் ஆண்டு புதிய தொடக்கமாக அமையும்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in