தாயும், சிசுவும் உயிரிழந்த விவகாரம்: மரக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை வழக்கு

தாயும், சிசுவும் உயிரிழந்த விவகாரம்: மரக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை வழக்கு
Updated on
1 min read

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் அருகே ரூ.20 ஆயிரம் கடனுக்​காக நிறை​மாதக் கர்ப்​பிணியை மருத்​து​வ​மனைக்கு அனுப்ப மறுத்​த​தால், கொட்​டகை​யிலேயே தாயும் சேயும் இறந்த விவ​காரத்​தில் மரக்​கடை உரிமை​யாளர் மீது தீண்​டாமை வன்​கொடுமைத் தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

சிங்​காடி​வாக்​கம் ஊராட்​சி, இருளர் குடி​யிருப்​பைச் சேர்ந்​தவர் ஆனந்த் (40). இவரது மனைவி தேன்​மொழி (35). இத்​தம்​ப​தி​யினர் தங்​களது குடும்​பத்​தினருடன் காஞ்​சிபுரம் - அரக்​கோணம் சாலை​யில் வெள்ளை கேட்பகு​தி​யில் ஆறு​முகம் என்​பவரது விறகு வெட்​டும் பட்​டறை​யில் கடந்த 6 மாதங்​களாகக் கூலி வேலை செய்து வந்​துள்​ளனர்.

இதற்​காக ஆறு​முகத்​திடம் ஆனந்த் ரூ.20 ஆயிரம் முன்​பணம் வாங்​கி​யிருந்​த​தால், அங்​கேயே கொட்​டகை அமைத்​துத் தங்​கி​யிருந்து வேலை செய்து வந்​துள்​ளனர். இந்​நிலை​யில், நிறை​மாதக் கர்ப்​பிணி​யாக இருந்த தேன்​மொழியைப் பரிசோதனைக்​காக மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல உரிமை​யாளர் ஆறு​முகத்​திடம் ஆனந்த் அனு​மதி கேட்​டுள்​ளார்.

ஆனால், வாங்​கிய கடனுக்கு விறகு வெட்​டிக் கொடுத்​து​விட்​டுத்​தான் செல்ல வேண்​டும் எனக் கூறி ஆறு​முகம் அனு​மதி மறுத்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே நேற்று முன்​தினம் மதி​யம் கொட்​டகை​யில் இருந்த தேன்​மொழிக்​குக் கடுமை​யான பிரசவ வலி ஏற்​பட்​டுள்​ளது. சிறிது நேரத்​திலேயே தேன்​மொழி​யும், அவரது வயிற்​றில் இருந்த சிசு​வும் மருத்​துவ சிகிச்சை கிடைக்​காமல் கொட்​டகை​யிலேயே உயி​ரிழந்​தனர்.

இது தொடர்​பாக ஆனந்த் பொன்​னேரிக்​கரை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். மக்​கள்மன்​றம் உள்​ளிட்ட அமைப்​பு​கள் இது தொடர்​பாகப் போராட்​டம் நடத்​தவுள்​ள​தாக அறி​வித்​தன. இதனைத் தொடர்ந்து போலீ​ஸார் இயற்​கைக்கு மாறான மரணம் என்று வழக்​குப் பதிவு செய்​தனர்.

இதை ஏற்​காமல் மாவட்​ட எஸ்பி அலு​வல​கத்​தில் ஆனந்த் தரப்​பினர் மனு அளித்​தனர். தீண்​டாமை வன்​கொடுமைத் தடுப்​புச் சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்ய வலி​யுறுத்​தினர். கொத்​தடிமை​யாக அவர்​களை வைத்​திருந்​த​தாக​வும் புகார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து போலீ​ஸார் தீண்​டாமை வன்​கொடுமைத் தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் வழக்​குப் பதிவு செய்​தனர். கொத்​தடிமை​யாக வைத்​திருந்த சம்​பவம் தொடர்​பாகச் சார் ஆட்​சி​யர் விசா​ரணைக்​கும் பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது.

கைது செய்ய வலி​யுறுத்​தல்

இந்​நிலை​யில் தமிழ்​நாடு பழங்​குடி மக்​கள் சங்க மாநிலச் செய​லா​ளர் ஜா.பூ​பாலன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ``இந்​தச் சம்​பவத்​தில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டும்குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் கைது செய்​யப்​ப​டாதது கண்​டிக்​கத்​தக்​கது. உடனடி​யாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தேன்​மொழி குடும்​பத்​துக்கு ரூ.20 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​வதுடன், பல்​வேறு மாவட்​டங்​களில் கொத்​தடிமை​களாக பணி​யாற்​றும் இருளர் குடும்​பங்​களை மீட்டு மறு​வாழ்​வு அளிக்​க வேண்​டும்​'’ என்​று தெரிவித்​துள்​ளார்​.

தாயும், சிசுவும் உயிரிழந்த விவகாரம்: மரக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை வழக்கு
குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை ரத்து செய்த ஆம்னி பேருந்து நிறுவனங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in