சென்னை: தொழிலதிபருக்கு தொந்தரவு தந்த ஜிம் மாஸ்டர் கைது

தினேஷ்

தினேஷ்

Updated on: 
1 min read

சென்னை: பெண் தொழிலதிபரை பின்​தொடர்ந்து தொந்​தரவு செய்​த​தாக ஜிம் மாஸ்​டர் கைது செய்​யப்​பட்​டார். பாடி பகுதி​யில் மென்​பொருள் நிறு​வனம் நடத்​தும் பெண் (41) ஒரு​வர், கணவரைப் பிரிந்து அதே பகுதி​யில் தனது மக​னுடன் வசித்து வரு​கிறார்.

இவர் கடந்த 2024-ல் தனது வீட்​டின் அருகே உள்ள உடற்​பயிற்​சிக் கூடத்​துக்​குச் சென்​றபோது, வேளச்​சேரியைச் சேர்ந்த ஜிம் மாஸ்​டர் தினேஷுடன் (36) அறி​முகம் ஏற்​பட்​டுள்​ளது.

பின்​னர், அவரது நட​வடிக்​கைகள் பிடிக்​காததால் அவரை தவிர்த்து வந்​தார். ஆனாலும், தினேஷ் அவரை பின்​தொடர்ந்து தொந்​தரவு செய்து வந்​துள்​ளார். கடந்த 18-ம் தேதி திரு​மங்​கலம் பகுதி​யில் காரில் சென்ற பெண்ணை, இருசக்​கர வாக​னத்​தில் வந்த தினேஷ் வழிமறித்​துள்​ளார்.

கீழே இறங்​குமாறு கூறி, அவதூறாகப் பேசி மிரட்​டல் விடுத்​த​தாகவும் கூறப்​படு​கிறது. புகாரின்​பேரில் பெண்​கள் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் திரு​மங்​கலம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து, தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

<div class="paragraphs"><p>தினேஷ்</p></div>
அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை ஸ்டான்லியில் சிக்கலான ரத்த நாள அறுவை சிகிச்சை வெற்றி

X