அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை ஸ்டான்லியில் சிக்கலான ரத்த நாள அறுவை சிகிச்சை வெற்றி

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை தலைவர் இளஞ்சேரலாதனுக்கு நன்றி தெரிவிக்கும் மருத்துவப் பயனாளிகள். உடன் மருத்துவக் கல்லூரி முதல்வர்  எஸ்.ஜோதி குமார் (கூடுதல் பொறுப்பு), மயக்கவியல் துறை தலைவர் பத்மினி உள்ளிட்டோர்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை தலைவர் இளஞ்சேரலாதனுக்கு நன்றி தெரிவிக்கும் மருத்துவப் பயனாளிகள். உடன் மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.ஜோதி குமார் (கூடுதல் பொறுப்பு), மயக்கவியல் துறை தலைவர் பத்மினி உள்ளிட்டோர்.

Updated on: 
2 min read

சென்னை: அரசு மருத்​து​வ​மனைகளில் முதன்​முறை​யாக, மிகச் சிக்​கலான மற்​றும் உயிருக்கு ஆபத்​தான இரண்டு அறுவை சிகிச்​சைகள் அரசு ஸ்​டான்லி மருத்​து​வ​மனை​யில் வெற்​றிகர​மாக மேற்​கொள்​ளப்​பட்​டது.

சென்னை அரசு ஸ்​டான்லி மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யின் ரத்த நாள அறுவை சிகிச்​சைத் துறை தலை​வர் இளஞ்​சேரலாதன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களில் பல மருத்​துவ ஆலோ​சனைகளைப் பெற்ற பின்​னர், இரண்டு நோயாளி​களும் இறுதி​யாக அரசு ஸ்​டான்லி மருத்​து​வ​மனை​யின் ரத்த நாள அறுவை சிகிச்​சைத் துறைக்கு வந்​தனர்.

கோவையை சேர்ந்த 60 வயது நோயாளிக்கு இதயத்​தி​லிருந்து உடலின் அனைத்​துப் பகுதி​களுக்​கும் ரத்​தத்தை எடுத்​துச் செல்​லும் முக்​கிய ரத்​தக் குழாயான பெருந்​தமனி​யின் வளைவுப் பகுதி, அதாவது மூளை​யின் இருபுறங்​களுக்​கும் மற்​றும் இரு கைகளுக்​கும் ரத்​தத்தை எடுத்​துச் செல்​லும் முக்​கிய ரத்​தக் குழாய்​கள் உள்ள சிக்​கலான பகுதி​யில் பெரிய ரத்​தக் குழாய் வீக்​கம் இருந்​தது, அவர் ஏற்​கெனவே வாய் புற்​றுநோய்க்​காக கதிர்​வீச்சு பெற்​றிருந்​ததால் கழுத்​துப் பகுதி​யில் ஏற்​பட்ட திசு மாற்​றங்​கள் காரண​மாக வழக்​க​மான பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்​கொள்​வது மிகவும் சிரமமாக இருந்​தது.

அவருக்கு இரண்டு கட்​டங்​களாக மிக நவீன அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டது. முதல் கட்​ட​மாக, மூளைக்​கும் இரு கைகளுக்​கும் ரத்​தம் செல்​லும் மூன்று முக்​கிய ரத்​தக் குழாய்​களுக்​கும் மாற்​றுப் பாதை ஏற்​படுத்​தும் வகை​யில், செயற்கை ரத்​தக் குழாய் பயன்​படுத்தி மூன்று பைபாஸ் இணைப்​பு​கள் அறுவை சிகிச்சை அரங்​கில் மேற்​கொள்​ளப்​பட்​டன. பின்​னர் 48 மணி நேரம் தீவிர சிகிச்சை பிரி​வில் தொடர் மருத்​துவ கண்​காணிப்​பில் இருந்​தார்.

இரண்​டாம் கட்​ட​மாக, நவீன எண்​டோவாஸ்குலர் தொழில்​நுட்​பத்​தின் மூலம், தொடை வழி​யாக வடிகுழாய் செலுத்தி, பெருந்​தமனி​யின் உள்ளே பிரத்​யேக ஸ்​டென்ட் பொருத்​தப்​பட்​டது. அரசு மருத்​து​வ​மனைகளில் இது போல இரண்டு கட்​டங்​களாக சிகிச்சை அளிப்​பது இதுவே முதல் முறை, தனியார் மருத்​து​வ​மனை​யில் இந்த சிகிச்​சைக்கு ரூ.60 லட்​சம் வரை செல​வாகும்.

இரண்​டாவது நோயாளியான 19 வயது இளம் பெண்​ணுக்கு, குடல்​களுக்கு ரத்​தம் வழங்​கும் மிக முக்​கிய​மான ரத்த நாளத்​தில் பெரிய வீக்​கம் கண்​டறியப்​பட்​டது.

இந்த வீக்​கம் அரு​கில் உள்ள மற்ற ரத்​தக் குழாயுடன் நெருக்​க​மாக ஒட்​டி​யிருந்​தால் அறுவை சிகிச்சை மிகவும் சவாலானதாகவும் அதிக ஆபத்​தானதாகவும் இருந்​தது.

ரத்த நாள அறுவை சிகிச்​சைக் குழு​வினர் வயிற்​றுப் பகுதி​யைத் திறந்து, மிகுந்த கவனத்​துடன் வீக்​கத்தை அகற்​றினர். இரு​வரும் நலமுடன் குணமடைந்து, விரைவில் வீடு திரும்​பவுள்​ளனர்.

இந்​தச் சிகிச்​சைகள் அனைத்​தும் முதலமைச்​சரின் விரிவான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் முற்​றி​லும் இல​வச​மாக வழங்​கப்​பட்​டன. இவ்​வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்​வின் போது ஸ்​டான்லி மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை முதல்​வர் எஸ்.ஜோதி​குமார் (கூடுதல் பொறுப்பு), மயக்​க​வியல் துறை தலை​வர் பத்​மினி மற்​றும் மருத்​துவ பயனாளி​கள் உடன் இருந்​தனர்.

<div class="paragraphs"><p>ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை தலைவர் இளஞ்சேரலாதனுக்கு நன்றி தெரிவிக்கும் மருத்துவப் பயனாளிகள். உடன் மருத்துவக் கல்லூரி முதல்வர்  எஸ்.ஜோதி குமார் (கூடுதல் பொறுப்பு), மயக்கவியல் துறை தலைவர் பத்மினி உள்ளிட்டோர்.</p></div>
சாகுபடி கணக்கெடுப்பு, உழவர் பதிவேடு பணி: கிராம நிர்வாக சங்கங்கள் வலியுறுத்தல்

X