கொடைக்கானல்: தொழிலதிபரை கொன்ற கும்பல் தலைமறைவு

சூர்ய நாராயணன்

சூர்ய நாராயணன்

Updated on
1 min read

திண்டுக்கல்: ​கொடைக்​கானலில் தொழில​திபரும், நடிகை​யின் தந்​தை​யு​மான சூர்ய நாராயணன் கொலை செய்​யப்​பட்​டது தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்​தவர் தொழில​திபர் சூர்ய நாராயணன் (73). இவருக்​குச் சொந்​த​மான தங்​கும் விடு​தி, கொடைக்கானல் குறிஞ்சி ஆண்​ட​வர் கோயில் அருகே உள்​ளது. இவர், மாயாவி திரைப்​படத்​தில் மாற்​றுத் திற​னாளி பெண்​ணாக நடித்த விஷ்ணுபிரி​யா​வின் தந்​தை​யா​வார்.

சூர்ய நாராயணின் விடு​தி​யில் கடந்த 2 நாட்​களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த 5 இளைஞர்​கள் அறை எடுத்து தங்​கினர். நேற்று முன்​தினம் மாலை விடு​தி​யில் பணிபுரி​யும் தொழிலா​ளர்​கள் பணி முடிந்து வீட்​டுக்​குச் சென்​று​விட்​டனர்.

சூர்ய நாராயணன் மற்​றும் அவரது உதவிக்கு ஆறு​முகம், முரளி ஆகிய 2 பணி​யாளர்​கள் மட்​டுமே விடு​தி​யில் இருந்​துள்​ளனர். அப்​போது, விடு​தி​யில் தங்​கி​யிருந்த 5 இளைஞர்​களும், பணி​யாளர்​களை கயிற்​றால் கட்​டிப்​போட்​டனர்.

பின்​னர், சூர்ய நாராயணனை​யும் நாற்​காலி​யில் கயிற்​றால் கட்​டிப்​போட்​டு​விட்​டு, அவரது வாய், மூக்கை பிளாஸ்​டிக் டேப்​பால் ஒட்டி மூச்​சு​ விட முடி​யாத​படி செய்​து, கொலை செய்​தனர்.

பின்​னர், அந்த விடு​தி​யில் இருந்த முக்​கிய ஆவணங்​கள் மற்​றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க், செல்​போன் ஆகிய​வற்றை எடுத்​துக்​கொண்டு 5 பேரும்தப்​பினர். இந்​நிலை​யில், கயிற்​றால் கட்​டப்​பட்​டிருந்த ஒரு பணி​யாளர் அதிலிருந்து விடு​பட்டு வெளியே வந்து அக்​கம்​பக்​கத்​தினருக்​குத் தகவல் தெரி​வித்​தார்.

தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீ​ஸார் சூர்ய நாராயணனின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

முன்விரோதம் காரணமா?

மேலும் இது தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்​து, கொலை​யாளி​களைத் தேடி வரு​கின்​றனர். ஏற்​கெனவே, மகள் காதல் விவ​காரத்​தில் வாகன ஓட்​டுநரை கூலிப்​படையை ஏவி சூர்ய நாராயணன் கொலை செய்​த​தாக வழக்கு நிலு​வை​யில் உள்​ளது.

இதனால் ஏற்​பட்ட முன்​விரோதம் காரணமாக சூர்ய நாராயணன் கொலை செய்​யப்​பட்​டாரா அல்​லது தொழில் போட்டி காரணமா என்று போலீ​ஸார் தீவிரமாக விசா​ரித்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>சூர்ய நாராயணன்</p></div>
விஐடி சென்னையில் ‘வைப்ரன்ஸ் 2026’ சர்வதேச கலை விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in