சென்னை | வங்கி லாக்கரில் இருந்து வாடிக்கையாளர்களின் நகைகளை திருடிய முன்னாள் பெண் அதிகாரி மீண்டும் கைது

பத்​மபிரியா

பத்​மபிரியா

Updated on
1 min read

சென்னை: வங்கி லாக்​கரில் இருந்து வாடிக்கையாளர்களின் 2 கிலோ தங்க நகைகள் நூதன முறை​யில் திருடப்​பட்ட வழக்​கில் வங்​கி​யின் முன்​னாள் பெண் அதி​காரி 2-வது முறை​யாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்​சேரி 100 அடி சாலை​யில் உள்ள தனி​யார் வங்கியில் கடந்த டிச.5-ம் தேதி பர்தா அணிந்​த​படி பெண் ஒரு​வர் வந்​தார். தன்னை சர்​மிளா பானு என அறி​முகம் செய்து கொண்​டார். தனது கணவர் அப்​துல் இந்த வங்​கி​யில் கணக்கு வைத்​துள்​ளார்.

அதே​போல, தனக்​கும் கணக்கு தொடங்க வேண்​டும் என கேட்​டுள்​ளார். இந்த நிலை​யில், வங்​கிக் கணக்கு தொடங்க தேவை​யான ஆவணங்​களை எடுத்து வரு​வ​தாக கூறிச் சென்ற அந்​தப் பெண், திரும்ப வரவில்​லை. இதற்​கிடையே, அவர் அமர்ந்​திருந்த இருக்​கை​யில் ஒரு பெரிய பர்ஸ் இருந்​தது.

அதை வங்கி அதி​காரி​கள் திறந்து பார்த்​த​போது, தங்க பிஸ்​கட், வளை​யல் உட்பட சுமார் 2 கிலோ தங்க நகை இருந்​துள்​ளது. இதுகுறித்து வங்கி அதி​காரி​கள் வேளச்​சேரி காவல் நிலை​யத்​தில் தங்​கத்தை ஒப்​படைத்து புகார் அளித்​தனர்.

நகையை விட்​டுச் சென்​றது வங்​கி​யின் முன்​னாள் ஊழிய​ரான வேளச்​சேரியைச் சேர்ந்த பத்​மபிரியா (38) என்​பது போலீஸ் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இவர், லாக்​கரில் வைக்​கப்​படும் நகைகளை மேற்​பார்​வை​யிடும் அதி​காரி​யாக இருந்​துள்​ளார்.

அப்​போது, தணிக்கை செய்​வ​தாக கூறி வாடிக்​கை​யாளர்​களின் நகைகளை சிறிது சிறி​தாக திருடி உள்​ளார். இந்த குற்​றத்​துக்​காக கைது செய்​யப்​பட்​ட​வர் ஜாமீனில் வெளியே வந்​துள்​ளார்.

பின்​னர், கைவசம் இருந்த நகைகளை யாருக்​கும் தெரி​யாமல் வங்​கி​யில் எடுத்த லாக்​கரிலேயே வைக்க முயன்​ற​போது அது முடி​யாத​தால் அந்தநகைகளை வங்​கி​யிலேயே விட்​டுச் சென்​றது தெரிய​வந்​தது.

இந்த வழக்கு சென்னை மத்​திய குற்​றப்​பிரிவுக்கு மாற்​றப்​பட்ட நிலை​யில் அந்த பிரிவு போலீ​ஸார் அவரை மீண்​டும்​ கைது செய்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>பத்​மபிரியா</p></div>
சென்னை | காவல் ஆணையர் அலுவலகத்தில் தீப்பிடித்து ஆவணங்கள் சேதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in