சென்னை | காவல் ஆணையர் அலுவலகத்தில் தீப்பிடித்து ஆவணங்கள் சேதம்

சென்னை | காவல் ஆணையர் அலுவலகத்தில் தீப்பிடித்து ஆவணங்கள் சேதம்
Updated on
1 min read

சென்னை: காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் தீப்​பிடித்​த​தில் ஆவணங்​கள், கம்ப்​யூட்​டர் சேதமடைந்​தன. வேப்​பேரி ஈவிகே சம்​பத் சாலை​யில் சென்னை காவல் துறை​யின் தலைமை அலு​வல​கம் உள்​ளது. 8 தளங்​கள் கொண்ட இந்த அலு​வலகத்​தில் காவல் துறை​யின் பல்​வேறு பிரிவு​கள் செயல்​படு​கின்​றன.

2-வது தளத்​தில் மத்​திய குற்​றப்​பிரிவு உள்​ளது. இந்​நிலை​யில், இந்த தளத்​தில் இருந்து நேற்று காலை 7 மணி அளவில் கரும்​புகை வெளி​யேறியது. போலீ​ஸார் உடனடி​யாக தீயணைப்​புத் துறைக்கு தகவல் கொடுத்​தனர்.

தீயணைப்பு படை வீரர்​கள் விரைந்து வந்​து, தண்​ணீரை பீச்​சி​யடித்து தீயை அணைத்​தனர். அதற்​குள், சில ஆவணங்​கள், கம்ப்​யூட்​டர், பர்​னிச்​சர் பொருட்​கள் ஆகியவை சேதமடைந்​தன.

மின்​கசி​வால் தீப்​பிடித்​த​தாக கூறப்​படு​கிறது. விபத்​துக்​கான காரணம் குறித்து வேப்பேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை | காவல் ஆணையர் அலுவலகத்தில் தீப்பிடித்து ஆவணங்கள் சேதம்
சாத்தான்குளம் வழக்கில் 9 போலீஸாருக்கும் அதிகபட்ச தண்டனை: மத்திய அரசு மனுவில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in