ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழந்த தொழிலாளி கருப்பசாமி

உயிரிழந்த தொழிலாளி கருப்பசாமி

Updated on
1 min read

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக் கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

சிவகாசி அருகே திருத்தங்கல் முருகன் காலனியை சேர்ந்தவர் அய்யனார் (57). இவர் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு உள்ள 7 அறைகளில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் வெடி மருந்துகளை எடை போடும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.

அதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு அச்சம் தவிர்த்தான் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (52) என்பவர் காயமடைந்தார். உடல் முழுவதும் தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பசாமி முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கருப்பசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p><em>உயிரிழந்த தொழிலாளி கருப்பசாமி</em> </p></div>
“ஆட்சிக் கலைப்பு - கவிழ்ப்பு எண்ணம் இல்லை; ஸ்டாலின் பேச்சை திரித்து பரப்புகின்றனர்” - தங்கம் தென்னரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in