

சென்னை: நுங்கம்பாக்கம் காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் வில்லியம் அலெக்சாண்டர் என்ற அலெக்ஸ் (38). இவர் தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 29-ம் தேதி அறை எடுத்து தங்கியிருந்தார்.
அப்போது அலெக்சாண்டரின் நண்பரான ஜெய் என்பவர், தனக்கு அறிமுகமான 23 வயது இளம்பெண் ஒருவரை ஓட்டல் அறைக்கு அழைத்து வந்தார். அவரிடம் அலெக்சாண்டர் தவறாக நடக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது தோழியை தகவல் கொடுத்தார். அங்கு வந்த தோழியிடமும் அலெக்சாண்டர் தவறாக நடக்க முயன்றார். இதனால் அச்சமடைந்த 2 பெண்களும் அங்கிருந்து தப்பி சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பாண்டிபஜார் போலீஸார் விரைந்து சென்று 2 பெண்களிடமும் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அலெக்சாண்டரை போலீஸார் கைது செய்தனர். அவரது நண்பர் ஜெய்யை போலீஸார் தேடி வருகின்றனர்.