மகளை கொலை செய்த தந்தை கைது: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்

சிம்யா, ஆறுமுகம்

சிம்யா, ஆறுமுகம்

Updated on
1 min read

திருப்பூர்: ​திரு​மணத்​துக்கு பின்​னர், இன்​ஸ்​டாகி​ராமில் பழகிய ஆண் நண்​பருடன் வெளியூர் சென்ற மகளைக் கொன்ற தந்தை கைது செய்​யப்​பட்​டார். நாகப்​பட்​டினத்தை சேர்ந்​தவர் ஆறு​முகம் (48). இவர் குடும்​பத்​துடன் திருப்​பூர் முரு​கம்​பாளை​யத்​தில் தங்​கி, சாய ஆலை​யில் வேலை செய்து வரு​கிறார். இவரது மகள் சிம்யா (23). இவரது கணவர் பிரேம்​கு​மார். இவர்​களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்​ளது.

இந்​நிலை​யில், கடந்த 3-ம் தேதி குழந்​தை​யுடன் சிம்யா தலைமறை​வா​னார். இது தொடர்​பாக ஆறு​முகம், திருப்​பூர் வீர​பாண்டி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

சிம்​யா​வின் இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்தை சோதித்​த​போது, அதில் கன்​னி​யாகுமரியை சேர்ந்த பிர​வீன்​கு​மார் என்​பவருடன் பழகி வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து வீர​பாண்டி போலீ​ஸார் குமரி சென்​று, சிம்யா மற்​றும் குழந்​தையை நேற்று மீட்டு வந்​தனர்.

பின்​னர், சிம்​யா​வுக்​கும், அவரது தந்தை ஆறு​முகத்​துக்​கும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் ஆத்​திரமடைந்த ஆறு​முகம், சிம்​யா​வின் கழுத்தை அறுத்​துக் கொலை செய்​தார்.

தகவலறிந்து வந்த வீர​பாண்டி போலீ​ஸார், சிம்​யா​வின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும், ஆறு​முகத்தை கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

<div class="paragraphs"><p>சிம்யா, ஆறுமுகம்</p></div>
மேட்டூர் நீர்மட்டம் 96.17 அடியாக சரிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in