

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அணைக்கு கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 24 கனஅடியாக நீர்வரத்து நீடிக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 96.17 அடியாகவும், நீர் இருப்பு 60.61 டிஎம்சி ஆகவும் இருந்தது.