ஆம்பூர் அருகே தந்தையின் 3-வது மனைவி படுகொலை

மகனின் காதல் திருமணம் பிடிக்காததால் தகராறு
ஆம்பூர் அருகே தந்தையின் 3-வது மனைவி படுகொலை
Updated on
1 min read

ஆம்​பூர்: ஆம்பூர் அருகே மகனின் காதல் திருமண விவ​காரத்​தில் நடந்த குடும்பத் தகராறில் தந்தையின் 3-வது மனைவி கொல்லப்​பட்​ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்​பத்​தூர் மாவட்​டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் முனியன். இவரது 2-வது மனைவி ராஜேஸ்வரி. இவர்​களது மகன் அபிமன்யு. ராஜேஸ்​வரி கடந்த 6 ஆண்​டு​களுக்கு முன்பு உடல்​நிலை குறை​வால் உயி​ரிழந்த நிலை​யில் முனியன் பேர்​ணாம்​பட்டு அடுத்த பெரிய​தாமல்​செருவு கிராமத்​தைச் சேர்ந்த கவிதா (42) என்பவரை 3-ஆவதாக திரு​மணம் செய்தார்.

முனியனின் இரண்​டாவது மனை​விக்கு பிறந்த மகன் அபிமன்யு சென்​னை​யில் தன்​னுடன் பணி​யாற்றி வந்த வேறு சமூகத்​தைச் சேர்ந்த பிரதீ​பா(24) என்​பவரை காதலித்து திரு​மணம் செய்து கொண்​டார்.

திரு​மணத்​துக்கு பிறகு அபிமன்யு தனது மனை​வி​யுடன் பாலூர் பகு​தியில் குடியிருந்து வந்தார். இந்​நிலை​யில், அபிமன்யு மாற்று சமூக பெண்​ணை, திரு​மணம் செய்தது பிடிக்​காமல் முனியனுக்கும் கவிதாவுக்கும் அடிக்​கடி தகராறு ஏற்​பட்டுள்​ளது.

இந்​நிலை​யில், நேற்று அபிமன்யு மனைவி பிரதீ​பாவுக்​கும் கவி​தாவுக்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதை அபிமன்யு தாத்​தா சாமுண்டி வந்து கவி​தாவை கண்​டித்​துள்ளார்.

பின்னர் ஆத்​திரமடைந்த அவர், அரி​வாளால் கவி​தாவை சரமாரி​யாக வெட்​டி​யுள்​ளார். தடுக்க வந்த முனியனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் கவிதா சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உமரா​பாத் போலீ​ஸார் வந்து உடலை மீட்டு பரிசோதனைக்​காக வேலூர் அடுக்​கம்​பாறை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இச்​சம்​பவம் அப்​பகு​தி​யில் பரபரப்பை ஏற்​படுத்​தியுள்​ளது.

ஆம்பூர் அருகே தந்தையின் 3-வது மனைவி படுகொலை
விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம்: கைதானவரிடம் சம்பவ இடத்தில் வைத்து விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in