விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம்: கைதானவரிடம் சம்பவ இடத்தில் வைத்து விசாரணை

விரைவில் தண்டனை பெற்றுத் தர தென்மண்டல ஐஜி உறுதி
கொலை நடந்த பகுதிக்கு தர்ம முனீஸ்வரனை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த பகுதிக்கு தர்ம முனீஸ்வரனை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Updated on
2 min read

கோவில்பட்டி / மதுரை: தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்​தி​குளம் அருகே வேடநத்​தத்​தில் கொலை செய்​யப்பட்ட மாணவியின் உடலை 11 நாட்​களுக்கு பின்​னர் உறவினர்​கள் நேற்று பெற்​றுதகனம் செய்​தனர்.

இதில் துரிதமாக வழக்கை நடத்தி கொலையாளிக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என தென்மண்டல ஐஜி உறுதி தெரிவித்துள்ளார்.

வேடநத்​தத்​தைச் சேர்ந்த தொழிலாளி சுப்​பு​ராஜ் என்​பவரின், 17 வயது மகள் கடந்த 10-ம் தேதி இரவு கொலை செய்​யப்​பட்​டார்.

அவரது கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்​து உறவினர்​கள், கிராம மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதற்​கிடையே, 10-க்​கும் மேற்​பட்ட தனிப்​படைகள் அமைத்து போலீ​ஸார் பல்​வேறு கோணங்​களில் விசா​ரணை மேற்​கொண்​டனர். இவ்​விவ​காரத்​தில் ராம​நாத​புரம் மாவட்​டம், சாயல்​குடி மாரி​யம்​மன் கோவில் தெரு​வைச்சேர்ந்த முனிய​சாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீசுவரனை (37) நேற்று முன்​தினம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதையடுத்​து, மாணவியின் உறவினர்​கள் தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனைக்குச் சென்று மாணவியின் உடலை நேற்று பெற்​றுக்​கொண்​டனர். அங்​கு, மாணவியின் உடலுக்கு அமைச்​சர் பி.கீ​தாஜீவன், எம்​எல்​ஏக்​கள் ஜீ.​வி.​மார்க்​கண்​டேயன், கடம்​பூர் செ.​ராஜூ, பாஜக மாவட்​டத் தலை​வர் சரவண கிருஷ்ணன் மற்​றும் கிராம மக்​கள் அஞ்​சலி செலுத்​தினர். பின்னர், மயானத்துக்கு எடுத்து வந்து மாணவியின் உடல் தகனம் செய்​தனர்.

கைது செய்​யப்​பட்ட தர்ம முனீஸ்​வரனை நேற்று சம்பவ இடத்துக்கு போலீ​ஸார் அழைத்​துச் சென்​றனர். கொலை செய்​தது எப்​படி என விசா​ரித்தனர். பின்​னர், தூத்​துக்​குடி போக்சோ நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர்.

அவரை 14 நாட்கள் காவலில் வைக்​க​வும், ஏப்​.2-ம் தேதி ஆஜர்​படுத்​த​வும் நீதிபதி பிரீத்தா உத்​தர​விட்​டார். இதையடுத்​து, பலத்த பாது​காப்​புடன் பாளை​யங்​கோட்டை மத்​திய அவர் அடைக்கப்பட்டார். கைதான தர்ம முனீஸ்​வரன் ஏற்​கெனவே மூதாட்டி கொலை வழக்​கில் ஆயுள்​தண்​டனை பெற்​றவர்.

உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த டிச.18-ம் தேதி ஜாமீன் பெற்​றுள்​ளார். நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தூத்​துக்​குடி மகிளா நீதி​மன்​றத்​தில் தின​மும் கையெழுத்​திட்டு வந்​துள்​ளார்.

இதற்​காக அவர் தின​மும் சாயல்​குடி​யில் இருந்து மோட்​டார் சைக்​கிளில் வேடநத்​தம், குறுக்​குச்​சாலை வழி​யாக தூத்​துக்​குடிக்கு வந்து சென்​றுள்​ளார்.

செல​வுக்கு பணம் தேவைப்பட்​ட​தால் மோட்​டார் சைக்​கிளில் வரும்​போது அப்பகுதியை நோட்​ட​மிட்டுள்​ளார். அப்​போது, இரவு நேரங்​களில் வேடநத்​தம் கிராமத்​தைச் சேர்ந்த பெண்​கள் இயற்கை உபாதை கழிக்க காட்​டுப்​பகு​திக்குச் செல்​வதை கவனித்​துள்​ளார்.

10-ம் தேதி இரவு அப்​படி அவர் காட்​டுப்​பகு​தி​யில் நோட்​ட​மிட்​ட​போது, மாணவி அவரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் நகைகள் எது​வுமில்​லாததை அறிந்து பாலியல் வன்​கொடுமை செய்​து, கொலை செய்​து​விட்​டு தப்​பி​விட்​டதாக போலீ​ஸார் கூறினர்.

துரித நடவடிக்கை

இதனிடையே தென்​மண்டல ஐஜி விஜயேந்​திர பிதாரி கூறும்போது, இவ்​வழக்​கில் தொடக்​கத்​தில் எந்​தத் துப்​பும் கிடைக்​காத நிலை​யில், மிக நுணுக்​க​மாக அறிவியல்​ பூர்​வ​மாக விசாரித்து கொலை​யாளியை கண்​டறிந்​தோம்.

மற்றொரு கொலை வழக்கில் ஜாமீனில் வந்த சூழலில்தான் மாணவியை கொலை செய்திருக்​கிறார். இவ்​வழக்​கில், விசா​ரணையை துரிதப்​படுத்தி நீதி​மன்​றம் மூலம் உரிய தண்​டனை பெற்​றுத் தரப்​படும் என்​றார்.

<div class="paragraphs"><p>கொலை நடந்த பகுதிக்கு தர்ம முனீஸ்வரனை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 21 மார்ச் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in