சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: 53 வயது நபருக்கு 28 ஆண்​டு கடுங்காவல் சிறை

திரு​வள்​ளூர் போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்பு
நந்​தகு​மார்

நந்​தகு​மார்

Updated on: 
1 min read

திரு​வள்​ளூர்: திரு​வேற்​காடு பகு​தி​யில் வசித்து வந்​தவர் நந்தகுமார் (53). இவர் தன் வீட்​டருகே வசித்து வந்த சிறுமி குளிக்கும்​போது, செல்​போனில் புகைப்​படம் எடுத்து அதை காண்பித்​து, மிரட்டி பாலியல் வன்​கொடுமை​யும் செய்து வந்துள்ளார். இதனால் பயந்​து​போன சிறுமி கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்​டில் கடிதம் எழுதி வைத்​து​விட்​டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்​டார்.

இதுகுறித்து திரு​வேற்​காடு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து சிறுமியை மீட்டு நடத்​திய விசா​ரணை​யில், சிறுமியை நந்​தகு​மார் தொடர்ந்து பாலியல் வன்​கொடுமை செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து எஸ்​ஆர்​எம்​சி (​போரூர்) அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார், போக்சோ சட்​டம் மற்​றும் வீட்​டுக்​குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்​டல் உள்​ளிட்​டவை தொடர்பான பல்​வேறு சட்​டப்​பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து, நந்​தகு​மாரை கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை, திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. அரசுத் தரப்​பில் வழக்​கறிஞர் புவனேஸ்​வரி ஆஜராகி வாதாடி​னார். முடிவுக்கு வந்த வழக்கு விசா​ரணை​யில், நந்​தகு​மார் மீதான குற்​றங்​களில் பல நிரூபணமாகின. இதையடுத்​து, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்​வரி தீர்ப்பு அளித்​தார்.

அதில் சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த நந்​தகு​மாருக்​கு, போக்சோ உள்​ளிட்ட 3 சட்​டப்​பிரிவு​களின் கீழ் தலா 10 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறைத் தண்​டனை மற்​றும் ரூ.30 ஆயிரம் அபராதமும், காயம் ஏற்​படுத்​துதல், வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைதல், கொலை மிரட்​டல் ஆகிய 3 சட்​டப்​பிரிவு​களின் கீழ், 5 ஆண்​டு​கள், 10 ஆண்​டு​கள் மற்​றும் 3 ஆண்​டு​கள் என, 18 ஆண்டுகள் கடுங்​காவல் சிறைத் தண்​டனை மற்​றும் ரூ.20 ஆயிரம் அபராத​மும் விதித்து தீர்ப்பு அளித்​துள்​ளார்.

மேலும் இத்​தண்​டனை​களில், போக்சோ உள்​ளிட்ட 3 சட்​டப் பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்​டு​கள் விதிக்​கப்​பட்ட தண்டனைகளை ஏக காலத்​தி​லும், வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைதல் உள்​ளிட்ட 3 சட்​டப்​பிரிவு​களின் கீழ் விதிக்​கப்​பட்ட தண்டனை​களை தனித் தனி​யாக​வும் நந்​தகு​மார் அனுபவிக்க வேண்​டும் என தன் தீர்ப்​பில் தெரி​வித்​துள்​ளார்.

அதுமட்டுமல்லாமல், பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்​சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்​தர​விட்​டுள்​ளார். இதில் ரூ.2 லட்சம் ஏற்​கெனவே வழங்​கப்​பட்ட நிலை​யில் மீத​முள்ள ஒரு லட்சம் ரூபாயை 2 மாதத்​துக்​குள் சிறுமிக்கு வழங்க நீதிபதி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>நந்​தகு​மார்</p></div>
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்​தி​ய தோல் பொருட்​கள் ஏற்றுமதிக்கு பிரகாச​மான வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in