சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்​தில் கேட்​பாரற்று இருந்த ரூ.5 கோடி மதிப்​புள்ள போதைப்​பொருள் பறி​முதல் செய்யப்​பட்​டது.

சென்னை விமான நிலைய வளாகத்​தில் பழைய விமான நிலை​ய கார்கோ பகு​தியில், ஒரு பார்​சல் கேட்​பாரற்று இருந்​தது. இதனை பார்த்த பாது​காப்பு படை வீரர்​கள், அது வெடிபொருள் இல்லையென உறுதி செய்த பின் சுங்​கத்​ துறை அதி​காரி​களுக்கு தகவல் தெரி​வித்​தனர். அவர்​கள் சோதித்ததில் பவுடர் போன்ற பார்சல் இருந்தது. அதை ஆய்​வுக்​கூடத்​துக்கு அனுப்பி சோதனை செய்ததில், அது போதைப் பொருள் என்​பது தெரிய​வந்​தது. இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும்.

இதுகுறித்து சுங்​கத்​துறை அதி​காரி​கள், போதைப் பொருள் ​கடத்​தல் பிரிவுக்கு தகவல் தெரிவித்​தனர். அவர்​கள் வழக்கு பதிந்து விசாரித்து வரு​கின்​றனர். இந்தச் சம்பவம் விமான நிலைய வளாகத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது
42 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம்: புதுச்சேரியில் 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in