சென்னையில் போதைப் பொருள் விற்பனை: பெண் உட்பட 3 பேர் கைது

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: வேப்​பேரி காவல் நிலைய ஆய்​வாளர் தலை​மையிலான போலீ​ஸார் நேற்​று​முன்​தினம் வேப்​பேரி ஜோதி வெங்​க​டாசலம் தெரு, பிர​தாபெட் சாலை சந்​திப்பு அருகே வாகன தணிக்​கை​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, சந்​தேகத்​திற்​கிட​மாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்​த​போது, அதில் மெத்​தம்​பெட்​டமைன், போதை ஸ்டாம்​பு​கள், போதை மாத்​திரைகள் இருந்​தது தெரிந்​தது.

அதை பறி​முதல் செய்த போலீ​ஸார், காரில் பெங்களூருவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த நொளம்

​பூரை சேர்ந்த சங்​கீதா (40), மணலியை சேர்ந்த கார் ஓட்​டுநர் சிரஞ்​சீவி (29), முகலி​வாக்​கத்தை சேர்ந்த ஜான் (35) ஆகிய 3 பேரை கைது செய்​தனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சென்னையில் நண்பர் தலையில் கல்லை போட்டு கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in