சென்னையில் நண்பர் தலையில் கல்லை போட்டு கொலை

சென்னையில் நண்பர் தலையில் கல்லை போட்டு கொலை
Updated on
1 min read

காரப்பாக்கம்: சென்னை காரப்​பாக்​கம் காளி​யம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்த ஜீவா (27) பெயிண்டர் தொழிலா​ளி​. இவர் தனது பிறந்த நாளையொட்டி நண்​ப​ரான அரியலூரைச் சேர்ந்த ஆனந்​த​ராஜுடன் மது அருந்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. பின்​னர் இரு​வரும் அரு​கிலுள்ள ஏடிஎம் முன்பு நின்று பேசிக்​கொண்​டிருந்த போது வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு கைகலப்​பாக மாறிய நிலை​யில், மது​போதை​யில் இருந்த ஆனந்​த​ராஜ் அங்​கிருந்த பெரிய கல்லை தூக்கி ஜீவா​வின் தலை​யில் போட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இதில் ஜீவா​ சம்பவ இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தார். தகவலறிந்து சம்பவ இடத்​துக்கு வந்த கண்​ணகி நகர் போலீ​ஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், கொலை சம்​பவத்​தில் தொடர்​புடைய ஆனந்​த​ராஜை கைது செய்து விசா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

சென்னையில் நண்பர் தலையில் கல்லை போட்டு கொலை
வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in