

தருமபுரி: பாலியல் வன்கொடுமை செய்து சிறுவனை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தருமபுரி பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுவனை, அதே பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான பிரகாஷ் (22) என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில் தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் பிரகாஷுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு தலா ஒரு தூக்கு தண்டனை வீதம் இரட்டை தூக்கும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், இந்த சம்பவத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 201 மற்றும் 363 ஆகியவற்றுக்காக குற்றவாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.