டெல்லியில் பெண் கமாண்டோவை கொலை செய்த கணவர் கைது

கொலையான பெண் கமாண்டோ

கொலையான பெண் கமாண்டோ

Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி காவல் துறை​யில் கமாண்​டோ​வாக பணி​யாற்றி வந்த 4 மாத கர்ப்​பிணி பெண் ஒரு​வர் தனது கணவ​ரால் கொடூர​மாக தாக்​கப்​பட்டு உயி​ரிழந்​தார்.

டெல்லி காவல் துறை​யின் ஸ்வாட் கமாண்டோ பிரி​வில் பணி​யாற்றி வந்​தவர் காஜல் சவுத்ரி (27). இவரது கணவர் அங்​குர், பாது​காப்பு அமைச்​சகத்​தில் கிளார்க் ஆக பணி​யாற்றி வந்​தார். கணவன் - மனைவி இடையே பண விவ​காரத்​தில் சண்​டை, சச்​சரவு ஏற்​படு​வது வழக்​க​மாக இருந்​துள்​ளது. இந்​நிலை​யில் கடந்த 22-ம் தேதி இத்​தக​ராறு முற்​றிய​தில் ஆத்​திரமடைந்த அங்​குர், உடற்​ப​யிற்சி செய்ய பயன்​படுத்​தும் டம்​பிள்ஸை எடுத்து காஜலின் தலை​யில் தாக்​கி​யுள்​ளார்.

இதில் தலை​யில் பலத்த காயங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட காஜல், சிகிச்சை பலனின்றி கடந்த செவ்​வாய்க்​கிழமை உயி​ரிழந்​தார்.

காஜலின் சகோ​தரர் நிகில், டெல்லி நாடாளு​மன்ற தெரு காவல் நிலை​யத்​தில் காவல​ராகப் பணி​யாற்று வரு​கிறார்.

இந்த சம்​பவம் குறித்து அவர் கூறும்​போது, “காஜல் என்​னுடன் போனில் பேசிக்​கொண்​டிருந்​த​போது அவரை டம்​பில்ஸ் மூலம் அங்​குர் தாக்​கத் தொடங்​கி​னார். காஜலின் மாமி​யார் மற்​றும் இரண்டு நாத்​த​னார்​களும் வரதட்​சணை கேட்டு அவரை தொடர்ந்து துன்​புறுத்தி வந்​தனர்’’ என்​றார்.

காஜலின் தந்தை கூறும்​போது, ‘‘எனது மகள் 4 மாத கர்ப்​பிணி​யாக இருந்​தார். தாயும் வயிற்​றில் இருந்த குழந்​தை​யும் இறந்​து​விட்​டனர். அங்​குர் ஒன்று அல்ல, இரண்டு கொலைகளைச் செய்​துள்​ளான்” என்​றார்.

காஜல் கடந்த 2022-ல் டெல்லி காவல் துறை​யில் பணி​யில் சேர்ந்​தார். 2023-ல் டெல்லி கண்​டோன்​மென்ட்​டில் பணிபுரிந்த அன்​குரை மணந்​தார். இந்​தத் தம்​ப​தி​யருக்கு ஒன்​றரை வயது மகன் இருக்​கிறான்.

இந்த கொடூர சம்​பவம் தொடர்​பாக அங்​குர் கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்டு சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டு உள்ளார்​.

<div class="paragraphs"><p>கொலையான பெண் கமாண்டோ</p></div>
400 மீட்டர் தூரத்துக்கு ரூ.18,000 கட்டணம்: அமெரிக்க பெண்ணை ஏமாற்றிய மும்பை கார் ஓட்டுநர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in