400 மீட்டர் தூரத்துக்கு ரூ.18,000 கட்டணம்: அமெரிக்க பெண்ணை ஏமாற்றிய மும்பை கார் ஓட்டுநர் கைது

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

மும்பை: அமெரிக்க பெண்​ணிடம் 400 மீட்​டர் தூர பயணத்​துக்கு ரூ.18,000 வசூலித்த மும்பை கார் ஓட்​டுநர் தேஷ்​ராஜ் யாதவ் கைது செய்​யப்​பட்​டார்.

அமெரிக்​காவை சேர்ந்த பெண் சுற்​றுலா பயணி ஆரினோ அண்​மை​யில் மும்பை சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கி​னார். அங்​கிருந்து ஹில்​டன் நட்​சத்​திர ஓட்டலுக்கு செல்ல வாடகை காரை முன்​ப​திவு செய்​தார்.

மும்பை விமான நிலை​யத்​துக்​கும் நட்​சத்​திர ஓட்​டலுக்கும் இடையி​லான தொலைவு 400 மீட்​டர் ஆகும். ஆனால் கார் ஓட்​டுநர் தேஷ்​ராஜ், ஆரினோவை அந்​தேரி கிழக்கு பகுதிக்கு அழைத்​துச் சென்​றார். சுமார் 20 நிமிடங்​கள் ஆங்காங்கே காரில் சுற்றி திரிந்​தார். இறு​தி​யாக நட்​சத்​திர ஓட்​டலுக்கு அழைத்​துச் சென்​றார். இதற்​காக அவரிடம் ரூ.18,000 கட்​ட​ணம் வசூலித்​தார்.

இதன்​பிறகு நட்​சத்​திர ஓட்​டல் ஊழியர்​களிடம், வாடகை கார் கட்​ட​ணம் குறித்து ஆரினோ கேட்​டறிந்​தார். அப்​போது​தான் கார் ஓட்​டுநர் தேஷ்​ராஜ் தன்னை ஏமாற்​றி​யிருப்​பது அவருக்கு தெரிய​வந்​தது. இதுதொடர்​பாக அவர் சமூக வலை​தளத்​தில் ஒரு பதிவை வெளி​யிட்​டார்.

அதில், ‘‘நான் இந்​தி​யாவை நேசிக்​கிறேன். இந்​திய உணவு வகைகளை விரும்​பு​கிறேன். ஒரு திரு​மணத்​தில் பங்​கேற்​ப​தற்​காக மும்பை வந்​தேன். ஆனால் கார் ஓட்​டுநர் என்னை திட்​ட​மிட்டு ஏமாற்​றி​விட்​டார். இது​போன்ற சில திருடர்​களால் இந்​தி​யா​வின் பெயருக்கு களங்​கம் ஏற்​படு​கிறது’’ என்று குறிப்​பிட்டு இருந்​தார். மேலும் காரின் பதிவெண் புகைப்​படத்​தை​யும் அவர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டார்.

அமெரிக்க பெண்​ணின் சமூக வலைதள பதிவு வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து மும்பை போலீ​ஸார் விசா​ரணை நடத்தி கார் ஓட்​டுநர் தேஷ்​ராஜை (50) கைது செய்​தனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “சம்​பந்​தப்​பட்ட கார் ஓட்​டுநரின் உரிமத்தை ரத்து செய்ய ஆர்​டிஓ அலு​வல​கத்​துக்கு பரிந்​துரை செய்​துள்​ளோம். அவர் மீது சட்​டரீ​தி​யாக நடவடிக்​கை எடுக்​கப்​படும்​’’ என்​று தெரிவித்​தனர்​.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
ஒடிசா: லஞ்சம் வாங்கிய சிபிஐ அதிகாரி மீது வழக்குப் பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in