தென்மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த கும்பல்: 12 பேர் கைது; வங்கிக் கணக்குகள் முடக்கம்

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க குவிந்த முதலீட்டாளர்கள்.

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க குவிந்த முதலீட்டாளர்கள்.

Updated on
2 min read

மதுரை/ திண்டுக்கல்: ஆன்​லைன் செயலி மூலம் முதலீடு செய்​தால் டாலர் மதிப்​பில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறிதென் மாவட்​டங்​களில் பொது​மக்​களை ஏமாற்றி கோடிக்​கணக்​கான ரூபாய் மோசடி செய்தது தொடர்​பாக மதுரை அருகே 12 பேரை கைது செய்த போலீ​ஸார் அவர்களின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். மேலும் இருவரை தேடி வரு​கின்​றனர்.

மதுரை மாவட்​டம் திரு​வாதவூர் அரு​கிலுள்ள கட்​டடையன்​பட்​டியைச் சேர்ந்​தவர் ரஞ்​சித். வெளி​நாட்​டில் வேலை செய்த இவர் 2 ஆண்​டு​களுக்கு முன்பு ஊர் திரும்​பி​னார். இவரும், இவரது நண்​பர் அருணும் ஆன்​லைன் செயலி மூலம் எப்​.க்​யூ.எல், வி.ஜே. என்ற பெயரில் முதலீட்​டுத் திட்​டங்​களை அறி​முகம் செய்​தனர்.

ஒரு செயலி​யில் ரூ.50 ஆயிர​மும், மற்​றொரு செயலி​யில் ரூ.1 லட்​ச​மும் முதலீடு செய்​தால் அத்​தொகை டாலர்​களாக மாற்​றப்​படும். செல்​போன்​களில் பதி​விறக்​கம் செய்​துள்ள செயலிக்கு 3 முறை வரும் குறுந்​தகவலை `க்​ளிக்' செய்​வ​தால் டாலரின் மதிப்பு அதி​கரிக்​கும் என்று கூறினர்.

இதை நம்பி மதுரை, விருதுநகர், தேனி, திண்​டுக்​கல், ராம​நாத​புரம், சிவகங்​கை உள்​ளிட்ட தென்மாவட்​டங்​களைச் சேர்ந்த ஆயிரக்​கணக்​கானோர் லட்​சக்​கணக்​கில் பணத்தை முதலீடு செய்​தனர். இதற்கு எவ்​வித ரசீதும், ஆதா​ர​மும் கிடை​யாது. இவ்​வாறு ஆயிரக்​கணக்​கானோர் பணம் செலுத்தி இணைந்​தனர்.

இந்​நிலை​யில் ஆக.20-ம் தேதிக்கு முன்​ன​தாகவே இந்த செயலி முதலீடுக்கான இணைப்பு திடீரென தடைப்​பட்​டது. ரஞ்​சித், அருண் ஆகியோர் தலைமறை​வான​தால் முதலீட்​டாளர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

நேற்று முன்​தினம் கட்​டையன்​பட்​டி​யில் ரஞ்​சித் வீட்டை பலரும்முற்​றுகை​யிட்​டனர். பின்​னர் மேலூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். மாவட்ட காவல்​துறை அறி​வுறுத்​தலின்​பேரில் பாதிக்​கப்​பட்​டோர் மதுரை எஸ்பி அலு​வல​கம், சைபர் குற்​றப்​பிரிவு மற்​றும் அந்​தந்த காவல் நிலை​யங்​களில் பாதிக்​கப்​பட்​டோர் புகார் கொடுத்தனர்.

இதற்​கிடையே, பாதிக்​கப்​பட்ட 300-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று மாலை மேலூர் அருகே நான்கு வழிச்​சாலை​யில் மறியலில் ஈடு​பட்​டனர். போலீ​ஸார் அவர்​களை கலைந்து போகச் செய்​தனர். மற்​றொரு குழு​வினர் கட்​டை​யம்​பட்​டி​யிலுள்ள ரஞ்​சித் வீட்​டை முற்​றுகை​யிட்​டனர். ஆத்​திரத்​தில் கற்​களை வீசி வீட்​டைச் சேதப்​படுத்​தினர். அலங்​காநல்​லூர் காவல் நிலையத்​தில் புகார் கொடுக்க வந்த முதலீட்​டாளர்​களும் நேற்று சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: இது​வரை 70 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் முதலீடு செய்​திருப்​ப​தாகத் தெரி​கிறது. ரூ.1 முதல் 5 லட்​சத்​துக்கு மேல் முதலீடு செய்து பலர் ஏமாந்​துள்​ளனர். மோசடிக்கு மூளை​யாக செயல்​பட்ட ரஞ்​சித், அவரது நண்​பர் அருணை தேடி வரு​கிறோம். அவர்​கள் உள்​ளிட்ட சிலர்மீது மதுரை மாவட்ட சைபர் குற்​றப்​பிரி​வில் வழக்​குப் பதிந்​துள்​ளோம். இது​வரை 7 பேரை நேற்று கைது செய்​தோம்.

இதனிடையே திண்​டுக்​கல் மாவட்​டம் நத்​தம் அருகே காசம் பட்டி கிராமத்​தைச் சேர்ந்த முகவர்​கள் ரமேஷ், விஜய் ஆகியோரது வீடு​களின் முன் நேற்று பாதிக்​கப்​பட்ட மக்​கள் முற்​றுகை​யிட்​டனர். போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு வந்த நிலை​யில் அவர்​களின் பாது​காப்​பை​யும் மீறி முகவர்​ மீது கற்​களை வீசி தாக்​குதல்​ நடத்​தினர்​. இதில்​ போலீஸ்​ வாக​ன​மும்​ சேதமடைந்​தது.

<div class="paragraphs"><p>அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க குவிந்த முதலீட்டாளர்கள்.</p></div>
ஆதவ் அர்ஜுனாவின் தவறான பேச்சுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குக: தமிழக பாஜக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in