

திருச்சி: ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 2 கிலோ புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்புள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான காமராஜர் அரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு போலீஸார் சோதனை செய்தபோது, 2 கிலோ எடையுடைய 104 புகையிலை பாக்கெட்டுகள் சிக்கின.
இதனை பதுக்கி வைத்த, காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீரங்கம் கிளைச் செயலாளரான மேல அடையவளஞ்சான் வீதியைச் சேர்ந்த நடராஜன் என்ற பாதயாத்திரை நடராஜனை போலீஸார் கைது செய்தனர்.