4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்: திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ.கருணாநிதியும் ஐக்கியம்

தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில்  கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எம்.ஆர்.சிவபதி, திமுக முன்னாள் எம்எல்ஏ கருணாநிதி உள்ளிட்டோர்.

தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எம்.ஆர்.சிவபதி, திமுக முன்னாள் எம்எல்ஏ கருணாநிதி உள்ளிட்டோர்.

Updated on
1 min read

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எம்.ஆர்.சிவபதி மற்றும் திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இருந்த கட்சி களின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. அதைத்தொடர்ந்து, அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினரின் பிரம்மாண்டமான இணைப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்களதுநூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் பனையூரில் திரண்டனர்.

தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற இணைப்பு விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.சிவபதி மற்றும் முன்னாள் எம்.பி இளவரசன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். மேலும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்களான சுந்தர்ராஜ், ராஜமுத்து, மான்ராஜ், ராஜவர்மன் பன்னீர்செல்வம், மு.முருகன், சிவா மற்றும் முன்னாள் திமுக எம்.எல்.ஏ-க்களான பி.காமராஜ், எம்.எஸ்.சண்முகம் உள்பட அமமுக, பாஜக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்த நிர்வாகிகளை அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், விஜய் தமிழன் பார்த்திபன், விஜயலட்சுமி, மரிய வில்சன், ஸ்ரீநாத் ஆகியோர் வரவேற்றனர்.

முன்னாள் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி: கடந்த சட்டப்பேரவை தேர்தலில், திமுக சார்பில் தி.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காததால் திமுக தலைமை மீது ஜெ.கருணாநிதி அதிருப்தியில் இருந்து வந்தார். அதைத்தொடர்ந்து அவரது மகள் மோனிஷா கருணாநிதி, தவெகவில் இணைந்தார். தற்போது, ஜெ.கருணாநிதியும் நேற்று தவெகவில் இணைந்தார்.

<div class="paragraphs"><p>தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில்  கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எம்.ஆர்.சிவபதி, திமுக முன்னாள் எம்எல்ஏ கருணாநிதி உள்ளிட்டோர்.</p></div>
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் தாமதம் ஏன்? - ட்ரம்ப் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in