ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங்

Updated on
1 min read

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மணிவண்ணன், சந்தோஷ் உள்ளிட்டோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பலரைக் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துள்ளதால் ஜாமீன் வழங்க கோரி சிறையில் இருக்கும் மணிவண்ணன், சந்தோஷ், கோகுல், செல்வராஜ், அருள் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், சிபிஐ விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும், விசாரணை முடிந்து எப்போது நீதிமன்ற விசாரணை தொடங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, விரைவான விசாரணை என்ற அடிப்படை உரிமை பாதிக்கப்படும் பட்சத்தில், குற்றத்தின் தன்மையை மட்டும் காரணம் காட்டி ஜாமீன் வழங்குவதை மறுக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் திர்ப்பை சுட்டிக்காட்டி சிறையில் உள்ள மணிவண்ணன், சந்தோஷ் உள்ளிட்டோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி, மனுதாரர்கள் தினமும் காலை 10 மணிக்கு விசாரணை அதிகாரியின் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கவோ அல்லது தலைமறைவாகவோ முயலக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

<div class="paragraphs"><p>ஆம்ஸ்ட்ராங்</p></div>
இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் - மாணிக்கம் தாகூர், கனிமொழி உள்ளிட்டோர் புகழ் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in