சென்னை | காதலிக்கு செலவு செய்த பணத்தை திருப்பிக் கேட்டதால் கல்லூரி மாணவரை காரில் கடத்தி தாக்குதல்

சென்னை | காதலிக்கு செலவு செய்த பணத்தை திருப்பிக் கேட்டதால் கல்லூரி மாணவரை காரில் கடத்தி தாக்குதல்
Updated on
1 min read

சென்னை: கடலூர் மாவட்​டம், ஸ்ரீமுஷ்ணம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சசிகு​மார் (19). மதுர​வாயல் பகு​தி​யில் உள்ள கல்​லூரி ஒன்​றில் படித்து வரு​கிறார். இவருக்கு இன்​ஸ்​டாகி​ராம் மூலம் ரித்​திகா என்​பவர் அறி​முக​மாகி, பின்​னர் இரு​வரும் காதலித்து வந்​துள்​ளனர்.

ரித்​திகா இன்​ஸ்​டாகி​ராமில் நிகழ்ச்​சிகள் நடத்​து​வதற்​குப் பணம் தேவைப்​படு​வ​தாக சசிகு​மாரிடம் கேட்​ட​போது, அவர் அவ்​வப்​போது சிறிது சிறி​தாக மொத்​தம் ரூ.1.87 லட்​சம் கொடுத்​தா​ராம்.

இந்​நிலை​யில் ரித்​திகா வேறொரு நபரைக் காதலிப்​பது சசிகு​மாருக்கு தெரிய​வந்​து, இதுகுறித்து அவர் கேட்​ட​போது, தகராறு ஏற்​பட்டு இரு​வரும் பிரிந்​து​விட்​டனர். இது ஒரு​புறம் இருக்க கல்​லூரிக்கு கட்​ட​ணம் செலுத்த வைத்​திருந்த பணத்தை சசிகு​மார் ரித்​தி​கா​வுக்கு சிறிது சிறி​தாக கொடுத்​த​தால், கல்​லூரிக்கு பணம் கட்ட முடி​யாமல், கல்​லூரி நிர்​வாகம் அவரை வெளி​யேற்​றியது.

இதனால் வேதனையடைந்த சசிகு​மார், ரித்​தி​கா​விடம் தான் கொடுத்த பணத்தை திருப்​பித் தரு​மாறு கேட்​ட​போது, பணம் தர மறுத்​துள்​ளார்.

இந்​நிலை​யில், கடந்த 1-ம் தேதி இரவு, அப்பு என்​பவர் சசிகு​மாரை செல்​போனில் தொடர்பு கொண்​டு, ரித்​திகா பணம் தர உள்​ள​தாக​வும், கோயம்​பேடு பேருந்து நிலை​யம் அரு​கில் வரு​மாறும் கூறிய​தால், சசிகு​மார் அங்கு சென்​றுள்​ளார்.

அங்குகாரில் இருந்த ரித்​திகா மற்​றும் அவரது தோழி உட்பட 4 பேர் பணத்தை தரு​வ​தாகக் கூறி தாம்​பரம் பகு​திக்கு காரில் அழைத்​துச் சென்​றனர். பின்​னர் தாம்​பரம் அருகே காரில் இருந்த ரித்​திகா உள்​ளிட்ட 4 நபர்​கள் மற்​றும் அங்​கிருந்த சுமார் 5 பேர் சேர்ந்து சசிகு​மாரை தகாத வார்த்​தைகளால் பேசி, தாக்​கி, அரு​கி​லிருந்த சாக்​கடைக்​குள் தள்ளிவிட்​டு​ தப்பினர்.

சிஎம்​பிடி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் சசிகு​மாரை கடத்தி தாக்​கிய கிழக்கு தாம்​பரத்​தைச் சேர்ந்த ரித்​திகா (21), அவரது கூட்​டாளி​கள் மேற்கு தாம்​பரத்​தைச் சேர்ந்த சஞ்​சய் (22), சேலை​யூர் தர்​ஷினி (19), மேற்கு தாம்​பரத்​தைச் சேர்ந்த மோட்டு என்ற சரவணன் (20) ஆகிய 4 பேரை கைது செய்​தனர். இவ்​வழக்​கில் தலைமறை​வாக உள்ள மேலும் சிலரை தேடி வரு​கின்​றனர்​.

சென்னை | காதலிக்கு செலவு செய்த பணத்தை திருப்பிக் கேட்டதால் கல்லூரி மாணவரை காரில் கடத்தி தாக்குதல்
2025-26-ம் நிதியாண்டில் 3,405 பெட்டிகளை தயாரித்து சென்னை ஐசிஎஃப் சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in