11 சிறுமிகள் புகார்: தொழிலதிபர் வீரமணியின் மேலாளர் கைது

7-வது வழக்கு பதிவானது
11 சிறுமிகள் புகார்: தொழிலதிபர் வீரமணியின் மேலாளர் கைது
Updated on: 
1 min read

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீது, மேலும் ஒரு சிறுமி​யின் வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யில் 7-வது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இது​வரை 11 சிறுமிகள் பாதிக்​கப்​பட்​டுள்ள தகவல் வெளி​யான நிலை​யில், வீரமணி சட்ட நடவடிக்​கை​களில் இருந்து தப்​பிக்க பணப்​பரி​மாற்​றம் மேற்​கொண்ட அவரது மேலா​ளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

ஜெம் வீரமணிக்கு உடந்​தை​யாக இருந்​த​தாகக் கூறப்​படும் சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​மன், வீரமணி​யின் முன்​னாள் உதவி​யாளர் கணேசன், கார் ஓட்​டுநர்​கள் லாசர், பார்த்​திபன், பாபு ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது.

வீரமணியை 2 நாட்​கள் போலீஸ் காவலில் எடுத்த சிறப்பு புல​னாய்​வுக் குழு போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர். இதில் பல்​வேறு தகவல்​கள் தெரிய​வந்​துள்​ளன.

இந்த வழக்​கின் விசா​ரணை முன்​னேற்​றம் குறித்து பொது​மக்​கள் அறிந்​து​கொள்ள, வாரம் ஒரு​முறை அதி​காரப்​பூர்வ செய்​திக் குறிப்பை வெளி​யிட வேண்​டும் என சென்னை உயர் நீதி​மன்​றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டது. அதன்​படி, சிறப்பு புல​னாய்வு குழு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஜெம் வீரமணி மீது ஏற்​கெனவே 6 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன.

தற்​போது பாதிக்​கப்​பட்ட மற்​றொரு சிறுமி​யின் வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யில், 7-வ​தாக மேலும் ஒரு வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு விசா​ரணைக்கு எடுத்​துக்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இந்​தச் சம்​பவ​மும் ஜெம் வீரமணி​யின் பெண் தோழி​யான சாந்​தி​யின் வீட்​டில் நடை​பெற்​ற​தாக விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. மேலும், இவ்​வழக்​கு​கள் தொடர்​பாக வீரமணிக்கு உதவிய ஜெம் கிரானைட் நிறு​வனத்​தின் மேலா​ளர் சக்​திவேல் நேற்று (18-ம் தேதி) கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

இவர், வீரமணி சட்ட நடவடிக்​கை​களில் இருந்து தப்​பிப்​ப​தற்கு செய்த பணப்​பரி​மாற்​றங்​கள் குறித்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இது​வரை 11 சிறுமிகள் தொடர்​பான புகார்​களின் அடிப்​படை​யில் ஜெம் வீரமணி மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டு, விசா​ரணை தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுஒரு​புறம் இருக்க வீரமணியை மிரட்டி பணம் பறித்த கும்​பல் மற்​றும் அதன் பின்​னணி​யில் உள்​ளவர்கள் குறித்​தும் தனிப்​படை போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

11 சிறுமிகள் புகார்: தொழிலதிபர் வீரமணியின் மேலாளர் கைது
விடுமுறை தினத்தையொட்டி சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து 13 லட்சம் பேர் பயணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in