விடுமுறை தினத்தையொட்டி சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து 13 லட்சம் பேர் பயணம்

விடுமுறை தினத்தையொட்டி சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து 13 லட்சம் பேர் பயணம்
Updated on: 
1 min read

சென்னை: ஆ​யுத​பூஜை மற்​றும் தொடர் விடுமுறை தினத்​தையொட்டி சென்​னை​யில் இருந்து 13 லட்​சம் பேர் சொந்த ஊர்​களுக்கு பயணித்​துள்​ளனர்.

ஆயுத​பூஜை, விஜயதசமி பண்​டிகையை முன்​னிட்டு பலரும் சொந்த ஊர்​களுக்​குப் புறப்​பட்டு சென்​றுள்​ளனர். இதற்காக சென்னையில் 5 இடங்​களில் கடந்த 15-ம் தேதி முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

அதன்​படி 4 நாட்​களில் சென்​னையி​லிருந்து வழக்​க​மாக இயக்​கக் கூடிய 8,764 பேருந்​துகளு​டன், கூடு​தலாக 6,199 சிறப்​புப் பேருந்​துகள் என மொத்​த​மாக 14,963 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

இதில் கடந்த 15-ம் தேதி 1.15 லட்​சம் பயணி​களும், 16-ம் தேதி 1.47 லட்​சம் பயணி​களும், 17-ம் தேதி 1.53 லட்​சம் பயணி​களும் மற்​றும் நேற்​றைய தினம் 1.08 லட்​சம் பயணி​களும் என மொத்​த​மாக 5.23 லட்​சம் பேர் போக்​கு​வரத்து துறை மூல​மாக இயக்​கப்​பட்ட பேருந்​துகளில் பயணித்​துள்​ளனர்.

பண்​டிகை முடிந்த பின்​னர் நாளை மற்​றும் நாளை மறு​நாள் பல்​வேறு ஊர்​களி​லிருந்து பொது​மக்​கள் சென்னை திரும்ப வசதி​யாக 9,191 பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

இதேபோல், சென்னை எழும்​பூர், சென்ட்​ரல், தாம்​பரம் உள்​ளிட்ட ரயில் நிலை​யங்​களில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

பல்​வேறு நகரங்​களுக்கு சிறப்பு ரயில்​களும், முன்​ப​தி​வில்​லாத சிறப்பு ரயில்​களும் இயக்​கப்​பட்​டன. ஒட்​டுமொத்​த​மாக விமானங்​கள், ரயில்​கள், பேருந்​துகள் மற்​றும் சொந்த வாக​னங்​கள் மூல​மாக சென்​னை​யில் இருந்து 13 லட்​சம் பேர் சொந்த ஊர்​களுக்கு பயணித்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

பண்​டிகையை கொண்​டாட லட்​சக்​கணக்​கானோர் சென்​ற​தால் கோயம்​பேடு, கிண்​டி, தாம்​பரம், வடபழனி, அண்ணா சாலை உள்​ளிட்ட பகு​தி​களில் நெரிசல் குறைந்திருந்தது.

விடுமுறை தினத்தையொட்டி சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து 13 லட்சம் பேர் பயணம்
தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம்: குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in