காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: விருகம்பாக்கத்தில் அண்ணன், தம்பி கைது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: விருகம்பாக்கத்தில் அண்ணன், தம்பி கைது
Updated on
1 min read

சென்னை, விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவரை, பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே, நெற்குன்றத்தைச் சேர்ந்த சையத் அஷ்மத் என்பவர் பின் தொடர்ந்து வந்து காதலிக்கு மாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை மாணவி கண்டித்த நிலையில், கடந்த வாரம் மாணவி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சையத் அஷ்மத் அவரை தாக்கியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் காலை சையத் அஷமத், தனது தாய், தந்தை மற்றும் அண்ணனுடன் சேர்ந்து ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடினர்.

இது குறித்து அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த சையத அஷ்மத் (21) மற்றும் உடந்தையாக இருந்த அவரது அண்ணன் முகமது அம்சத் (23) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: விருகம்பாக்கத்தில் அண்ணன், தம்பி கைது
Lubber Pandhu: யசோதா, துர்கா காட்டும் ‘கெத்து’ம் அன்பும் | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in