வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழை பதிவிறக்கியதால் ரூ.5 லட்சம் இழந்த‌ பெங்களூரு தொழிலதிபர்

வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழை பதிவிறக்கியதால் ரூ.5 லட்சம் இழந்த‌ பெங்களூரு தொழிலதிபர்
Updated on
1 min read

பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த தொழில​திபர் ஒரு​வர் தனக்கு வாட்​ஸ்​-அப்​பில் வந்த திருமண அழைப்​ பிதழை பதிவிறக்கம் செய்​துள்​ளார். உடனே அவரது வங்கி கணக்​கில் இருந்து ரூ.5 லட்​சம் பறி​போனது.

பெங்​களூரு​வைச் சேர்ந்​தவர் நூர் நஹீத் கான் (42). தொழிலதிபரான இவருக்கு நேற்று முன் தினம் வாட்​ஸ்​-அப்​பில் திருமண அழைப்​பிதழ் வந்​துள்​ளது. அந்த குறுஞ்​செய்​தி​யில், "எங்கள் திரு​மணத்​திற்கு உங்​களை அழைப்​ப​தில் நாங்​கள் மகிழ்ச்​சி​யடைகிறோம். விழா​வின் முழு விவரங்​களுக்​கு, இணைக்கப்​பட்​டுள்ள அழைப்​பிதழைப் பதி​விறக்​கம் செய்​ய​வும்" என்று எழுதப்​பட்​டிருந்​து.

இதையடுத்து நூர் நஹீத் கான் அந்த இணைப்​பில் ஏபிகே கோப்பு வடி​வில் இருந்த அழைப்​பிதழை பதி​விறக்​கம் செய்​தார். உடனடியாக அவரது செல்​போனில் ஒரு செயலி நிறு​வப்​பட்​டு, வங்கிக் கணக்​கில் இருந்து ரூ.5 லட்​சத்து 440 எடுக்​கப்​பட்​ட​தாக குறுஞ்​செய்தி வந்​தது.

இதையடுத்து அவர் பெங்​களூரு இணைய குற்​றப்​பிரிவு போலீஸில் புகார் அளித்​தார். அதன் அடிப்​படை​யில், தகவல் தொழில்​நுட்​பச் சட்டம், பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரி​யாத நபர்​கள் மீது மோசடி வழக்​குப் பதிவு செய்யப்​பட்​டது.

வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழை பதிவிறக்கியதால் ரூ.5 லட்சம் இழந்த‌ பெங்களூரு தொழிலதிபர்
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in