பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி: இளைஞர் சுட்டுப்பிடிப்பு

ராஜேஸ்வரி, பிரகாஷ், தமிழரசன்

ராஜேஸ்வரி, பிரகாஷ், தமிழரசன்

Updated on
2 min read

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்​து​வ​மனை வளாகத்​தில் தற்​காலிக பெண் ஊழியரை பெட்​ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்​றவர், எஸ்​ஐயை தாக்​கி​விட்டு தப்​பியோட முயன்ற போது, இன்​ஸ்​பெக்​டர் துப்​பாக்​கி​யால் சுட்​டுப்​பிடித்த சம்​பவம், பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்னேரி அருகே உள்ள உப்​பர​பாளை​யத்​தைச் சேர்ந்​தவர் வினோத். கிரேன் ஆபரேட்​ட​ரான இவரது மனைவி ராஜேஸ்​வரி (34). இவர்​களுக்கு 2 குழந்​தைகள் உள்​ளனர்.

இந்​நிலை​யில், பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனை, அவசர சிகிச்​சைப் பிரி​வின் கணினி பிரி​வில் கடந்த 8 மாதங்​களாக தற்​காலிக ஊழிய​ராக பணிபுரிந்து வந்த ராஜேஸ்​வரி, வழக்​கம்​போல் நேற்று முன் தினம் காலை பணிக்கு சென்​று, மாலை பணி முடிந்​து, வீடு திரும்​புவதற்​காக மருத்​து​வ​மனை வளாகத்​தில் நடந்து சென்று கொண்​டிருந்த போது அங்கு வந்த நபர், தான் கேனில் வைத்​திருந்த பெட்​ரோலை அவர் மீது ஊற்​றி​னார்.

இதில், அதிர்ச்​சி​யடைந்த அவர் மருத்​து​வ​மனை உள்ளே செல்ல முயன்​ற​போது பின் தொடர்ந்து சென்ற அந்த நபர், ராஜேஸ்​வரி மீது தீ வைத்து தப்​பியோடி​னார்.

இதில், தீக்​காயமடைந்த ராஜேஸ்​வரி, மருத்​து​வ​மனை ஊழியர்​களால் மீட்​கப்​பட்​டு, அனு​ம​திக்​கப்​பட்​டார். மேல் சிகிச்​சைக்​காக 108 ஆம்​புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டு, அங்கு சிகிச்சை பெற்று வரு​கிறார்.

இதற்​கிடையே பொன்​னேரி ஜே.எம்.1 நீதி​மன்ற நீதிபதி சரண்யா செல்​வம், நேற்று முன் தினம் இரவு பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனைக்கு நேரடி​யாக சென்​று, சம்​பவம் நடந்த இடத்தை பார்​வை​யிட்​டு, மருத்​து​வர்​கள், ஊழியர்​களிடம் விசா​ரணை மேற்​கொண்​டார்.

இதுகுறித்​து, வழக்​குப் பதிவு செய்த பொன்​னேரி போலீ​ஸாரின் முதல் கட்ட விசா​ரணை​யில் கூறியதாவது: பொன்​னேரி அடுத்த மாதவரம் பகு​தி​யில் வசித்து வந்த வாகன ஓட்​டுந​ரான பிர​காஷ்(38)-க்கு ஏற்​கெனவே திரு​மண​மாகி இரு குழந்​தைகள் உள்ள நிலை​யில், சில ஆண்​டு​களுக்கு முன்பு அவரது மனைவி உடல் நலக்​குறை​வால் உயி​ரிழந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், சோழ​வரம் பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் 8 மாதங்​களுக்கு முன்பு ராஜேஸ்​வரி பணிபுரிந்த போது, அவருக்கு பிர​காஷ் அறி​முக​மா​னார். அந்த அறி​முகம், நாளடை​வில் தவறான நட்​பாக மாறி​யுள்​ளது.

இச்​சூழலில், கடந்த சில வாரங்​களாக ராஜேஸ்​வரி, பிர​காஷின் போன் அழைப்பை புறக்​கணித்து வந்​துள்​ளார். சில தினங்​களுக்கு முன்பு ராஜேஸ்​வரியை நேரில் சந்​தித்து வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்ட பிர​காஷ். நட்பை துண்​டித்​த ராஜேஸ்​வரி மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்​றுள்​ளார். இவ்​வாறு போலீ​ஸார் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மயானத்தில் பதுங்கல்

இச்​சூழலில், ராஜேஸ்​வரி மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​து​விட்டு தப்​பியோடிய பிர​காஷ், மாதவரம் அடுத்த பெருஞ்​சேரி கிராமத்​தில் உள்ள மயான பகு​தி​யில் பதுங்கி இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​ததையடுத்​து, நேற்று அதி​காலை 3 மணி​யள​வில் பொன்​னேரி காவல் ஆய்​வாளர் சிவகு​மார் தலை​மை​யில், உதவி காவல் ஆய்​வாளர் தமிழரசன் உள்​ளிட்​டோர் பெருஞ்​சேரி மயானத்​துக்கு சென்​று, அங்கு பதுங்கி இருந்த பிர​காஷை சுற்றி‌ வளைத்து கைது செய்ய முயன்​றனர்.

அப்​போது பிர​காஷ் தான் மறைத்து வைத்​திருந்த கத்​தியை எடுத்து உதவி காவல் ஆய்​வாளர் தமிழரசனை வெட்டி தப்​பியோட முயன்​றுள்​ளார்.

தீவிர சிகிச்சை

இதையடுத்​து, தற்​காப்​புக்​காக காவல் ஆய்​வாளர் சிவகு​மார் துப்​பாக்​கி​யால் பிர​காஷின் வலது காலில் சுட்​டார். குண்டு பாய்ந்து விழுந்த பிர​காஷை போலீ​ஸார் கைது செய்​தனர். தொடர்ந்​து, காயமடைந்த உதவி காவல் ஆய்​வாளர் தமிழரசன் மற்​றும் பிர​காஷ் ஆகிய இரு​வரை​யும் போலீ​ஸார் மீட்​டு, சிகிச்​சைக்​காக பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனை மற்​றும் சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர்.

அங்கு அவர்​கள் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதற்​கிடையே பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனைக்கு திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் கவிதா நேரில் சென்​று, சம்​பவம் குறித்து ஊழியர்​கள், மருத்​து​வர்​களிடம் கேட்​டறிந்​தார்.

பிறகு செய்​தி​யாளர்​களிடம் அவர் பேசியதாவது: “பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனை​யில் ஏற்​கெனவே போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். கூடு​தல் பாது​காப்பு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது” என்​றார்.

மேலும், பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் உதவி காவல் ஆய்​வாளர்​ தமிழரசனை, ஆவடி மாநகர காவல்​ இணை ஆணை​யர்​ சிவகு​மார்​ நேரில்​ சந்​தித்​து நலம்​ வி​சாரித்​தார்​.

<div class="paragraphs"><p>ராஜேஸ்வரி, பிரகாஷ், தமிழரசன்</p></div>
தமிழகத்தில் புதிதாக நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in