நீலகிரி மாவட்ட ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் மூலம் பண மோசடி செய்ய முயற்சி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் மூலம் பண மோசடி செய்ய முயற்சி
Updated on
1 min read

ஊட்டி: நீல​கிரி மாவட்ட ஆட்​சி​யரின் புகைப்​படத்தை ‘வாட்​ஸ்​-அப் ப்ரொஃபைல்’ படமாக வைத்து பணம் மோசடி செய்ய நடந்த முயற்சி குறித்து சைபர் கிரைம் போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர்.

ஊட்​டி​யில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் பணி​யாற்​றும் சிலருக்​கு. ஆட்​சி​யர் லட்​சுமி பவ்​யா​வின் புகைப்​படத்தை ப்ரொஃபைல் படமாக கொண்ட வாட்​ஸ்​அப் எண்​ணில் இருந்து ஒரு குறுஞ்​செய்தி வந்​தது.

அதில், ‘எனது வங்​கிக் கணக்கில் பிரச்​சினை இருப்​ப​தால் உடனடி​யாக பணம் அனுப்ப முடிய​வில்​லை, நீங்​கள் பணம் அனுப்பி உதவி செய்​தால், என் வேலை முடிந்​ததும் உங்​களுக்கு மீண்​டும் பணம் அனுப்​பு​கிறேன்’ என்று ஆட்​சி​யர் கூறு​வது போல இருந்​தது.

இதனால் சந்​தேகம் அடைந்த ஊழியர்​கள் ஆட்​சி​யருக்கு தகவல் தெரி​வித்​தனர். ஆட்​சி​யர் தரப்​பில் வந்த புகாரின்​பேரில், சைபர் கிரைம் போலீ​ஸார் விசா​ரிக்க மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் என்​.எஸ்​.நிஷா உத்​தர​விட்​டார்.

முதல்​கட்​ட​மாக, இந்​தப் போலி வாட்ஸ் அப் கணக்கு விர்ச்​சுவல் நம்​பர் முறை​யில் தாய்​லாந்​தில் தொடங்​கப்​பட்டு இருப்​ப​தாக​வும், இந்த மோசடி ‘பாஸ் கிரைம்’ என்​பதும் தெரிய​வந்​தது.

அதாவது, ஒரு அதி​காரி​யின் கீழ் பணி​யாற்​று​பவர்​களுக்​கு, அதி​காரி​யின் பெயரை பயன்​படுத்​தி, போலி​யாக படத்தை வைத்து பண மோசடி செய்​யும் முயற்சி ஆகும்.

இது​போன்று ஏற்​கெனவே பல மாவட்ட ஆட்​சி​யர்​களின் புகைப்​படங்​களை பயன்​படுத்தி போலி வாட்ஸ் அப் கணக்​கு​களை உரு​வாக்கி பணம் பறிக்க முயற்சி நடை​பெற்ற நிலை​யில், தற்​போது நீல​கிரி மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா புகைப்​படத்​துடன் போலி வாட்​ஸ்-அப் கணக்கு உரு​வாக்கி மோசடி செய்ய முயற்சி செய்​திருப்​பது பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

இதனிடையே, தனது பெயரில் பணம் கேட்​டால் யாரும் அனுப்ப வேண்​டாம் என மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்​யா​தனது வாட்​ஸ் அப்​பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் மூலம் பண மோசடி செய்ய முயற்சி
கொச்சி - தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in