மதுரை சிலைமான் அருகே அதிமுக நிர்வாகி கொலை: மனைவியே சதி செய்தது அம்பலம்

மதுரை சிலைமான் அருகே அதிமுக நிர்வாகி கொலை: மனைவியே சதி செய்தது அம்பலம்

செந்தில்

Updated on
1 min read

மதுரை: மதுரை அருகே அதிமுக நிர்​வாகி வெட்​டிக் கொல்​லப்​பட்​டார். அவரது மனை​வியே ஆட்​களை வைத்து தீர்த்​துக் கட்​டியது தெரிய​வந்​துள்​ளது. இது தொடர்​பாக மனைவி உட்பட 3 பேரை போலீ​ஸார் பிடித்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

மதுரை சிலை​மான் அரு​கே உள்ள சாமநத்​தம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் தனசேகர​பாண்​டியன் என்ற செந்​தில் (36). திருப்​பரங்​குன்​றம் ஒன்​றிய அதிமுக இளைஞர் பாசறை துணைச் செய​லா​ள​ரான இவர், சாமநத்​தம் ஊராட்சி முன்​னாள் துணைத் தலை​வ​ராக​வும் இருந்​துள்​ளார். இவருக்கு மனைவி காவ்யா மற்​றும் 2 குழந்​தைகள் உள்ளனர்.

சாமநத்​தம்​-நெடுங்​குளம் சாலை​யில் டீக்​கடை நடத்தி வந்த செந்​தில் நேற்று காலை 6 மணிக்கு கடையைத் திறக்​கச் சென்​றார். அப்​போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்​பல் செந்​திலை அரி​வாளால் வெட்​டிக் கொலை செய்​து​விட்​டு, அங்​கிருந்து தப்​பியது.

தகவலறிந்து வந்த சிலைமான் போலீ​ஸார் செந்தில் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இதுகுறித்து போலீ​ஸார் தரப்​பில் கூறிய​தாவது: செந்​தில் மனைவி காவ்​யா, வில்​லாபுரம் பகு​தி​யைச் சேர்ந்த கார்த்​திக் என்​பவருடன் பழகி​யுள்​ளார்.

இதை செந்​தில் கண்​டித்​த​தால், கணவன், மனை​விக்​கிடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்​டுள்​ளது. வில்​லாபுரத்​தில் உள்ள காவ்​யா​வின் தந்தை பேச்​சு​வார்த்தை நடத்​தி, கணவருடன் சேர்ந்து வாழுமாறு நேற்று முன்​தினம் மகளுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

கணவர், பெற்​றோர் தரப்​பில் தொடர்ந்து நெருக்​கடி ஏற்​பட்​ட​தால், தான் பழகி வந்த கார்த்​திக் மற்​றும் 4 பேரைப் பயன்​படுத்தி கணவரைக் கொல்ல காவ்யா திட்​ட​மிட்​டார்.

இதன்​படி, நேற்று அதி​காலை கடைக்​குச் சென்ற செந்​திலை கார்த்​திக் உட்பட 5 பேர் அரி​வாளால் வெட்​டிக் கொலை செய்​துள்​ளனர். இவ்​வாறு போலீ​ஸார் தெரி​வித்​தனர். மதுரை எஸ்​.பி. அரவிந்த் கூறும்​போது, “செந்​தில் மனை​வி​யின் தகாத பழக்​கத்​தால் இக்​கொலை நடந்​திருக்​கிறது.

இது தொடர்​பாக செந்​தில் மனைவி காவ்​யா, கார்த்​திக் உட்பட 3 பேரைப் பிடித்​துள்​ளோம், மேலும் இரு​வரை தேடு​கிறோம்” என்​றார். அதிமுக நிர்​வாகி செந்​தில் கொலை தொடர்​பாக கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி.தினகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்​தில் சட்​டம்-ஒழுங்கு மோச​மான நிலை​யில் இருப்​ப​தாகக் கூறி கண்​டனம் தெரிவித்துள்ளதுடன், திமுக அரசை அடியோடு வீழ்த்த வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​ உள்​ளனர்.

மதுரை சிலைமான் அருகே அதிமுக நிர்வாகி கொலை: மனைவியே சதி செய்தது அம்பலம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 82 கனஅடியாக சரிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in