சென்னை | இரட்டை கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது

சென்னை | இரட்டை கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது
Updated on
1 min read

சென்னை: இரட்டை கொலை வழக்​கில் தலைமறை​வாக இருந்​தவர் மீண்​டும் கைது செய்​யப்​பட்​டார். செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூரில் உள்ள நாவலூர் குடி​யிருப்​பில் வசித்து வந்த சுரேஷ் (24) மற்​றும் கோட்​டூர்​புரம், சித்ரா நகரில் வசித்து வந்த அருண் (25) ஆகிய இரு​வரும் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி முன் விரோதம் காரண​மாக வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டனர்.

இக்​கொலை தொடர்​பாக, கோட்​டூர்​புரம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த மனோஜ் உட்பட 5-க்​கும் மேற்​பட்​டோரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

வழக்கு விசா​ரணை சிங்​கார​வேலர் மாளிகை வளாகத்​தில் உள்ள 16-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், ஜாமீனில் வெளியே வந்த கரண் தலைமறை​வா​னார். அவரை கைது செய்ய நீதி​மன்​றம் கடந்த மாதம் 23-ம் தேதி பிடி​யாணை பிறப்​பித்​தது.

இந்​நிலை​யில், நங்​கநல்​லூரில் பதுங்கி இருந்த கரண் கைது செய்​யப்​பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை | இரட்டை கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது
சென்னை | வீடு தேடி கல்வி திட்டத்தின் கீழ் அரசு உதவி தொகை தருவதாக பெண்ணிடம் பணம் பறிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in