Published : 30 May 2022 06:02 AM
Last Updated : 30 May 2022 06:02 AM

ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க திருப்பத்தூர் - சித்தூர் மாவட்ட காவல் துறையின் கூட்டு நடவடிக்கை: கிராமங்களில் உள்ள கடத்தல் வழித்தடங்களை கண்டறிய ஆய்வு

வாணியம்பாடி அருகேயுள்ள சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின். (கோப்பு படம்)

வேலூர்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 23-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ‘‘தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி, ஆந்திர மாநிலத்துக்கு கடத் தப்பட்டு அங்குள்ள மில்களில் பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில சந்தைகளில் கிலோ 40 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள கிராமங்கள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்’’ என குறிப் பிட்டிருந்தார்.

ஏற்கெனவே காஞ்சிபும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு லாரி, லாரியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரின் குற்றச் சாட்டால் தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப் போது, சோதனைச் சாவடிகளை பலப்படுத்தி ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர மாநில எல்லையோர மாவட்டங் களில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால், 2019-20-ல் 514 வழக்குகளில் 366 பேரும், 2020-21-ல் 544 வழக்குகளில் 538 பேரும், 2021-22 ல் ஏப்ரல் வரை 937 வழக்குகளில் 836 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகளை, இந்த ஆட்சி ஓராண்டில் எடுத்துள்ளது’’ என குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதி காரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘திருப்பத்தூர் மாவட் டத்தில் உள்ள தும்பேரி, வெளதிகாமணிபெண்டா, கொல்லப்பல்லி, புல்லூர், காந்திநகர், தகரகுப்பம் சோதனைச் சாவடிகளில் உள்ளூர் காவலர் சுழற்சி முறையில் சோதனையிட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் நபர்களை கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவர்களின் பட்டியல் தயாரிக் கப்பட்டு கைது நடவடிக்கை தொடங்கியுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை மற்றும் சித்தூர் மாவட்ட காவல் துறையுடன் இணைந்து கூட்டு ரோந்து, கண்காணிப்பு மேற்கொள்ள விரைவில் ஒருங் கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அதேபோல், பொது விநியோக திட்டத்தில் இணைந்து நெல் அரவை மில்லில் இருந்து கடத்தலை தடுக்கவும் ஆய்வு நடத்தப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது.

வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும், நட மாடும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலங்களை இணைக்கும் கிராமங்கள் மற்றும் அங்குள்ள சாலைகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்ற ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி இருந்தால் அந்த சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப் படும்’’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x