Published : 03 Apr 2022 04:00 AM
Last Updated : 03 Apr 2022 04:00 AM

உதகை | பழங்குடியின மாணவியிடம் அத்துமீறல் - தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்

உதகை:உதகை அருகே உள்ள பழங்குடியினர் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே எம்.பாலாடாவில் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக சுப்பிரமணி (58) பணியாற்றி வந்தார். இவர், பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் பழங்குடியின மாணவியிடம் தகாத முறையில் அத்துமீறியதாக கூறப்படுகிறது. மாணவி தனது பெற்றோருடன் சென்று உதகை ஊரக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சுப்பிரமணி மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுகந்தி பரிமளம் கூறும் போது, ‘‘சென்னை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் உத்தரவுப்படி, சுப்பிரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x